பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

13

செயல்படுகின்றனர். ஒரு பிரிவு ஆளுங்கட்சியைச் சார்ந்து நிற்கும். மறுபிரிவு எதிர்க்கட்சியைச் சார்ந்து இயங்கும். இதனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் ஒரு பகுதியினரால் மற்ற பகுதியினருக்கு மறைமுகமான நன்மைகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். (பிற இனத்தவர்க்கோ இவர்களால் என்றும் தொல்லைதான்) ஆட்சிக்கு எதிரான பிரிவு மக்களிடையே எப்பொழுதும் ஒரு வகையான நிறைவில்லாத தன்மையை உருவாக்கிக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் குழப்பத்தையும் அந்நிலை தோற்றுவிக்கும். இதற்கு இக்காலத்தில் ஒர் எடுத்துக்காட்டு தரவேண்டுமாயின் ‘ஆனந்த விகடனை'யும் ‘துக்ளக்'கையும் சொல்லலாம். ஆனந்தவிகடன் அச்சகத்திலேயே துக்ளக் அச்சிட்டு வெளிப்படுத்தப் பெறுகின்றது, மேலும் இரண்டாவதன் பொறுப்பும் முதலாவதைச் சேர்ந்ததே! அவ்வாறிருக்கையில் ‘ஆனந்த விகடன்’ அரசியல் கொள்கை ‘துக்ளக்'கால் தாக்கப்பெறும். ‘துக்ளக்'கின் போக்கை கண்டித்து ஆனந்தவிகடனில் கட்டுரை வரும். இரண்டு நிலைகளையும் இரண்டு வேறுபட்ட போக்குகளாகக் கொண்டு இளிச்சவாய்த் தமிழர்கள் அவ்விதழ்களைப் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிப் படித்து வருவார்கள். இத்தகைய ‘சகுனி’ ‘சாணக்கிய’ வேலைகள் ஆரியத்தின் தலையாய மந்திர முறைகளில் ஒனாறும். இதனால் அவ்வினம் பெறுகின்ற நேரடி மறைமுக ஊதியங்களுக்கு அளவே இல்லை.

இன்றும் இந்தியாவில் மேலைப் பைதிரத்தில் உள்ள ‘அகில பாரத ஆரிய சபா’ முதற்கொண்டு தில்லியிலுள்ள ‘பாரதிய சனசங்கம்’ வரையுள்ள ஏறத்தாழ எண்பது அரசியல் கட்சிகளிலும் பெரும்பாலானவற்றில் பார்ப்பனர்களே முகாமையாக இருந்து வேலை செய்கின்றனர். அவர்களின் பழமைக் கொள்கைகளுக்கு முற்றிலும் நேர் எதிரிடையான பொதுவுடைமைக் கட்சிகளிலும்கூட அவர்களே மேல் வரிசைத் தலைவர்களாக விளங்குகின்றனர். எனின், அவர்களின் அரசியல் நரித்தனங்களைப் பற்றி மிகுதியும் விளக்கத் தேவையில்லை.

இன்னும், தங்களுக்கு வேண்டாத பிற இனத்தவரின் ஆட்சி ஏற்பட்டு விடுமானால் இவர்களின் வெறுப்பு வேலைகளுக்கும், பொறுப்பற்ற மனப்போக்குக்கும் அளவே இல்லை. இக்கால் தமிழக அரசு தங்களுக்குத் துணையாக இல்லை அல்லது தங்களில் ஒருவரையும் அவர்கள் அமைச்சராக அமர்த்தவில்லை என்பதற்காகவே, பாப்பனர்கள் செய்யும் குழிபறிப்பு வேலைகள்