பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

203

தன்னைச் சூழ்ந்த அனைத்துத் தனிநிலைச் செழிப்புகளை யெல்லாம் தன்வயமாக்கக் கூடியது. அந்த ஆரியத்தின் அப்பட்டமான நச்சுக்காடே இந்த இந்துமதம். மற்றபடி இந்துமதம் என்பது எவ்வகை மாந்த முன்னேற்றத்திற்கும் சிறிதும் பயன்படாது. மாந்த இனத்தையே கட்டழிக்க வல்ல இக் கொடிய மதம், அடித்து நொறுக்கப்பட வேண்டிய காட்டுவிலங்கு! சுட்டுப் பொசுக்கப்பட வேண்டிய ஒரு நச்சுக்காடு: தூர்த்து மூடவேண்டிய ஓர் அறியாமை நச்சுப் பொய்கை! மக்களை முன்னேறவிடாமல் மடமைச் சேற்றில் புதைந்துபோகச் செய்கின்ற படுசேறு நிறைந்த ஒரு சாப்பள்ளத்தாக்கு! இத் தன்மையுள்ள இந்துமதத்தினின்று வெளியேறுவதற்கு மிக்க தன்மான உணர்வும், வெட்டிச் சலுகைகளைத் தூவென்று காறித் துப்புகின்ற பற்றற்ற துணிவும், வாழ்க்கை என்பது இதுவென்று தேர்கின்ற மனவிளக்கமும் வேண்டும். அல்லது தங்களை வெளியேற்றிக் கொள்ளுகின்ற உள்முகத் தாக்கங்களாகிலும் நிகழ்ந்திருக்க வேண்டும்.

இக்கால், மீனாட்சிபுரங்களில் உருவாகி வரும் மன - மத - மாற்றங்கள், நாம் இரண்டாவதாகச் சொன்ன உள்முகத் தாக்கங்களாலேயே நிகழ்ந்துள்ளன என்பது, அம் மக்களின் வாய்(மை) உரைகளாலேயே மெய்ப்பிக்கப் பெற்றுள்ளது.‘பொருளாசையால் அன்று; பொருள் இல்லாமையாலும் அன்று, ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ என்ற நிலையால் நாங்கள் பட்ட கொடுமைகள், துன்பங்கள், இழிவுகள், தாழ்வுகள் - முதலியவற்றை இனியும் நாங்கள் தாங்கிக் கொண்டிருக்க முடியாது; எங்கள் தன்மான வுணர்வு அதற்கு இடங்கொடுக்கவில்லை’ என்று, அங்குச் சென்று, அவர்களின் மனவுணர்வுகளுடன் விளையாடிய அமைச்சர்கள், தலைவர்கள், மடத்(!)தலைவர்கள், இதழாசிரியர்கள், அதிகாரிகள் பொதுநிலைத் தொண்டர்கள் முதலிய அனைத்துப் பேர்களின் செவிகளிலும் மனங்களிலும் மண்டைக் கொழுப்புகளிலும் உறைக்குமாறு அறைந்து கூவி அழுது அரற்றிப் புலம்பியிருக்கின்றனர்.

அவர்கள் துணிந்துவிட்டனர்; நடைதொடங்கி விட்டனர்; ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஆடுமாடுகளைப் போல் அழுத்தி வைக்கப்பட்ட பள்ளம் படுகுழிகளிலிருந்து, கையூன்றி, மார்பால் வலித்து, கால்தூக்கி நின்று, சாதிவேறுபாடற்ற, மேடுபள்ளங்களற்ற, சமவெளிகளை நோக்கி, நிகரமை வாழ்வு மூச்சுக் காற்றை உள்வாங்கும், அங்காந்த நெஞ்சுடன், அகன்று விரிந்த கைகளுடன் எல்லாமாகிய ‘அல்லா'வை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர். அவர்களை நிறுத்துவது கடினம்! மிகமிகக் கடினம்! இனி, எவரும்,