பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/217

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 500 இந்துக் கோயில்களைப் பிர்லா கட்டித் தருகிறார்!
5000 பேர் சமசுக்கிருதப் பயிற்சி பெறுகிறார்கள்!

ஆர்.எசு.எசு., விசுவ இந்து பரீட்சத் இவற்றின் செயல்திட்டங்கள்!

சமசுக்கிருத வளர்ச்சி, இந்துமதப் பரப்புதல் -
இரண்டுமே அவர்கள் கொள்கை !

தமிழர்களுக்குத் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழின முன்னேற்றம்
பற்றி அக்கறை வரவேண்டும்!

செல்வர்கள் அதற்குத் துணைநிற்க வேண்டும்!

பார்ப்பனியத்திற்கும் பிற இந்துமதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முழுக் கவலை என்னவென்றால், இந்தியாவில் முசுலீம் மதத்தையும், கிறித்தவ மதத்தையும், வேரில்லாமல் செய்துவிடவேண்டும் என்பது தான். இரண்டும் இந்தியாவிற்குச் சொந்தமில்லாத வேற்று நாட்டு மதங்கள் என்பது அவர்கள் கருத்து. இந்து என்னும் பார்ப்பனிய மதம் ஒன்று மட்டுமே இந்நாட்டுக்குரிய உள்நாட்டு மதமாம். எனவே, இந்துமதம் பற்றிய அனைத்து முயற்சிகளையும் ஒரு புற