பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/218

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

முயற்சியாகவும், அதற்குத் துணையான சமசுக்கிருத வளர்ச்சியை ஓர் அக முயற்சியாகவும் அவர்கள் ஒரே பொழுது செய்து வருகிறார்கள். சமசுக்கிருதத்தைத் தவிர்த்து இந்துமதத்தை நிலைப்படுத்துதல் இயலாது இந்துமதத்தின் உயிரே சமசுக்கிருதத்தில் தான் இருக்கிறது.

சமசுக்கிருதத்தை அவர்கள் தேவமொழி என்று சொல்வது நிலைபெற்ற கருத்தாக இருந்தால்தான், ஆரியப் பார்ப்பனர்களுக்கும் தங்களைத் தேவர்கள் என்று கூறிக்கொள்ள முடியும். அவர்கள் தேவர்கள் அல்லது பூதேவர்கள் என்பது நிலைப்பாடு பெற்றால்தான் இந்து மதத்திற்குக் காவலர்களாகவும் அதிகாரிகளாகவும் அவர்கள் இருக்க முடியும். அப்பொழுதுதான் இந்துமதமும் இந்நாட்டில் நிலையாக இருக்க முடியும். இதைக் கீழ்வரும் ஒரு பழைய சமசுக்கிருதச் சொலவகம் நன்றாக எடுத்துக்காட்டுகிறது.

தெய்வாதீனம் ஜகத் ஸர்வம்
மந்த்ரா தீனந்து தைவதம்
தன் மந்த்ரம் ப்ராஹ்மணா தீனம்
ப்ராஹ்மனா மம தைவதம்’

(இதன் பொருள் : உலகம் தெய்வத்தின் ஆளுமையுள் (ஆதிக்கத்தில்) உள்ளது; தெய்வம் மந்திரத்தின் ஆளுமையுள் இருக்கிறது; அந்த மந்திரம் பிராமணர்களின் ஆளுமையுள் இருக்கிறது; எனவே, பிராமணரே நம் தெய்வம்.) ஆகவே, இந்து மத வளர்ச்சிக்குச் சமசுக்கிருதமே அடிப்படையாக இருக்கிறது. சமசுக்கிருதமோ பிராமணர்களுக்குத் தேவையான இந்துமத மூலப்பொருளாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியா அஃதாவது பாரத நாடு சமசுக்கிருதத்தையும், சமசுக்கிருதம் பிராமணர்களையும் தவிர்த்து வாழ முடியாது! சமசுக்கிருதம் தவிர்க்கப்பட்டால் பிராமணியமும் தகர்ந்து போகும். இந்தக் கருத்துகளை உள்ளடக்கி நாம் இப்படியொரு சொலவகத்தைப் புதியதாக அமைக்கலாம்.

ப்ராஹ்மணா தினம் சமஸ்கிருதம்;
சம்ஸ்கிருதா தீனந்து ஹிந்துமதம்:
தன்மதம் ப்ராஹ்மணா தீனம்
ப்ராஹ்மணா மம பாரதம்.’

எனவேதான் சமசுக்கிருத வளர்ச்சியில் பார்ப்பணியம் தன் ஆளுமைக்கு உரிய நிலமாக நிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமானால், இந்துமதத்தை அது நிலைப்படுத்திக் கொள்ள