பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/240

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

தொலைக்காட்சித் துறையை இதற்காகவே அவர்கள் வளர்த்தெடுக்கிறார்கள்.

இந்தியா என்றால், இங்கு இருப்பவர்கள் இந்தி பேசும் வட நாட்டு மக்களே, அல்லது ஆரியத்தமிழ் பேசும் பார்ப்பனர்களே, என்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர்கள் அடித்துக் கூறிக் கொண்டு வருகிறார்கள். வேறு இனத்தவர்களே இங்கு வாழவில்லை என்று பொருள்படும்படி காட்சிகளையும் கருத்துகளையும் அமைத்துத் தொலைக்காட்சிக் கருவியை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி நேரத்தில், 2 மணி நேரத்தையே தமிழுக்கு ஒதுக்குகிறார்கள். அதிலும் அந்த நேரத்தில் அருவருப்பும், இழிவும் நிறைந்த காட்சியைக் கொண்ட ஆட்டமும் கூத்தும் மிகுந்த திரைப்படப் பாடல்களையும் மிகப்பழைய அல்லது பயனற்ற புதிய திரைப்படங்களையுமே அவர்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள். அவற்றில் மத மூட நம்பிக்கைகளே, அல்லது கீழ்த்தர உணர்வுகளே நிரம்பியிருக்கின்றன. இந்திமொழிக் காட்சிகள், கருத்து நிறைந்த அரசியல், அறிவியல் செய்திகள் அடங்கிய தொகுப்புகளாகத் தரப்படுகின்றன. இவற்றால், மக்கள் மனங்களில், தமிழில் மூடநம்பிக்கைகளும், அருவருப்புகளும் தவிர வேறொன்றுமில்லை என்னும் எண்ணத்தை மறைமுகமா, சூழ்ச்சியாக விதைக்கிறார்கள். இந்தி நிகழ்ச்சிகளுளக்கு மட்டும் 4.30 மணி நேரத்தை ஒதுக்கிக் கொள்கிறார்கள்.

ஞாயிற்றுக் கிழமைகளில், காலை 8.30 மணியில் இருந்து நாள் முழுவதும் காட்டப்படும்_ 15, 16 மணி நேர நிகழ்ச்சிகளில் தமிழில் ஒன்றுக்கும் உதவாத நிகழ்ச்சிக்கும், வரட்டுத்தனமான திரைப்படத்துக்கும் 3 மணி நேரம், ஆங்கிலத்துக்கு 1 மணி நேரம், இந்திக்கு மட்டும் 11 அல்லது 12 மணி நேரம். இந்தி மொழியையும், தேசியத்தையும் வளர்க்க, தமிழ்நாட்டு வரிப்பணம் கொள்ளை போகிறது. தேசியம் என்றால் இந்தி மொழியும், வடநாட்டுக்காரனின் கதைகளும், நாடகங்களும் காட்சிகளுந்தாமா? உழவனைக் காட்டினால் இந்திக்காரன், வணிகனைக் காட்டினால் வடநாட்டுக்காரன்; கலைகளைக் காட்டினாலும் அவன்கள்தாம்! வயிற்றெரிச்சல்! வயிற்றெரிச்சல்! தப்பித் தவறித் தமிழ்நாட்டைப் பற்றி ஒரு செய்தியோ, கலியாணமோ, கருமமோ இருந்தால் அவற்றில் பார்ப்பான்! அவன் குடும்பம்! இஃதென்ன குடியரசு நாடா? அல்லது இந்திக்காரனின் கும்மாளக் கூத்தாட்ட மேடையா? தொலைக்காட்சி நிலையத்தில் மானமுள்ள தமிழர் ஒருவருமே இல்லையா? எல்லாருமா பார்ப்பானுக்கும் வடநாட்டுக்காரனுக்கும் பிறந்தவர்களாகப் போய்விட்டனர்?