பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/245

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பொருள்நசையும், சாதி நசையும், மத நசையும்

க்கள் மனமாற்றம் கொள்ளவேண்டும் - அதை அவர்களே செய்துகொள்ள முடியாது. எனவே அவர்களை மனமாற்றம் கொள்ளும்படி செய்யவேண்டும். மக்கள் மனமாற்றம் பெறாத நிலையில் எந்தப் புரட்சியால் விளைந்த பயனும் நிலைபெறாது. எனவே, மக்களுக்குச் சமவுடைமை அல்லது பொதுவுடைமைப் பொருளியல் சார்ந்த ஒர் அரசை நாம் உருவாக்கித் தர விரும்பினால், அப்படிப்பட்ட ஒர் அரசின் தனிச்சிறப்புத் தன்மையை நாம் அவர்களுக்கு உணர்த்திட வேண்டுமன்றோ? அவ்வாறு உணர்த்தாத வரையில், அவர்கள் வெறும் பழைமை விரும்பிகளாகவேதாம் இருக்க முடியும். அவர்களின் தாழ்வு நிலைக்கு அவர்களேதாம், அல்லது அவர்கள் பிறவிதான் காரணம் என்று அவர்கள் நம்பிக்கிடக்கும் போக்கு, அவர்களுக்கு மாறவே மாறாது.

முதலாளியக் கோட்பாட்டுக்கு மதம் மிகமிக அடிப்படையானது. அதுதான் அவர்களின் பொருள்பறிப்பு முயற்சிக்கு ஒர் இரும்புத் திரை! அவர்களைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருக்க, மக்களுக்குக் கொடுக்கும் மயக்கமருந்து! இந்த மதத்தின் ஆட்சியை ஒடுக்காவிடில், அடித்துச் சாய்க்காவிடில், ஏழையர் தம்மைத் தாமே ஒடுக்கிக் கொள்வர்; தம்மைத் தாமே அடக்கிக்கொள்வர். ஏழைகளை உண்மை உணரும்படி செய்ய வேண்டுமானால் முதலாளிகளின் கைகளில் உள்ள இந்த மதம் என்னும் மந்திரக்கோலைத் தட்டிப் பறித்தாக வேண்டும்;