பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/253

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

251


காட்டுகிறார்கள் என்றுந்தான் பொருள்படும். இது கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறிவதைப் போன்றது.

நேரு சிலைதிறப்பு விழாவில், இராசீவ், ‘நேருவைப் பற்றிக் குறிப்பிடுகையில், “அவர் முழுமையாக மதச் சார்பின்மையைக் கடைப்பிடித்தார்" என்று பாராட்டினார். நேருவின் ஆட்சிநாளில், மதத்திற்கோ மதத்தலைவர்களுக்கோ இத்துணை ஆளுமை, அரசியல் தலையீடு, இருந்ததில்லை. இப்பொழுதுதான் இருக்க இருக்க ஆட்சி, பார்ப்பன ஆளுமையாகவே மாறிவருவதைப் பார்க்கிறோம். இஃது அவர்களுக்கும் நல்லதன்று; நாட்டின் எதிர்காலத்திற்கும் நன்றன்று என்று எச்சரிக்கின்றோம். மதம் ஆட்சிக்கட்டில் ஏறினால், ஆட்சி இருண்டுவிடும் என்பது அழிக்கமுடியாத உண்மை!

- தமிழ்நிலம், இதழ் எண் : 97, 1987