பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/270

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

இந்த ஓர் உண்மையைக் கொண்டே, பார்ப்பனியம் என்பது, இந்தியாவைப் பொறுத்த அளவில் மக்களியல் கூறுகள் அனைத்துக்கும் எவ்வாறு அடிப்படையான ஆற்றலாக உள்ளது என்பதை நாம் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். அத்துடன் அந்தப் பார்ப்பனியத்திற்கு எல்லா நிலைகளிலும் இந்து மதம, தனியான, வலிவான ஒரு பேராற்றலாக விளங்குவதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு பார்ப்பனியம் இந்துமதத்தையும், இந்துமதம் பார்ப்பனியத்தையும், ஒன்றையொன்று கவ்விக் கொண்டும், இழுத்துப் பிடித்துக்கொண்டும், இருதலை நாகம் போல் உள்ளது.

இனி, எதிர்பாரா வகையில் இவ்வாறு அமைந்துவிட்ட, பார்ப்பனியச் சார்பற்ற அரசைப் பார்ப்பனர்கள் எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாகி நிற்பதை, இப் பார்ப்பனரல்லாத தலைமையரசுகளை வீழ்த்தப் பொதுவாக நடுவணரசிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் பார்ப்பனர்கள், இந்த அரசுகள் அமைந்த நாள் முதலாகத் தொடர்ந்து பல வகையிலும் குற்றம் சாட்டி வருவதையும், இனக் கலவரங்கள், மதக் கலவரங்கள், ! அரசியல் கிளர்ச்சிகள், மக்கள் போராட்டங்கள் பலவற்றை உருவாக்கி எதிர்த்து வருவதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நடுவணரசைப் பதவிவிலகச் செய்யும் கோரிக்கைகளும், தமிழக அரசைப் பதவிநீக்கஞ் செய்ய நடுவணரசுக்கு விடுக்கின்ற கோரிக்கைகளும், இப் பார்ப்பனீய - இந்துமதப் புகைச்சல்களின் விளைவே. இந்நிலையில், இனி, எதிர்காலத்திலாவது இப் பார்ப்பனீய - இந்து மதத் தாக்கங்கள் இல்லாமல், அவற்றின் வலிவுகளை நாம் குறைத்தொடுக்க வேண்டுமானால், இந்துக்கள் என்று கருதத்தக்க பார்ப்பனரல்லாத திரவிடர்கள் - தமிழர்கள் ஒட்டுமொத்தமாக அம்மதத்தினின்று தங்களை வெளியேற்றிக் கொள்ளுதல் மிக மிக இன்றியமையாதது.

தமிழர்களைப் பொறுத்தமட்டில் இந்துமதம் எனும் நச்சுமதம் - அவர்களை அடிமைப்படுத்தி, அனைத்து உரிமைகளையும் பறித்துக் கொண்டுள்ள வல்லாண்மை மதம் - உடனே அவர்களால் உதறித் தள்ளப்படவேண்டிய ஒன்றாகும்.

தமிழினத்தவர்களை மதக்கொள்கையின் அடிப்படையில், மூன்று பிரிவுகளாகப் பிரிந்து நிற்பவர்களாகக் கருதலாம். அவை,