பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/274

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இப்பொழுதுள்ள அரசியல்காரர்கள் அனைவரும் பதவி, பணம், புகழ் ஆகியவற்றக்கு அலைபவர்களாகவே உள்ளனர்!
மக்கள் நலம் கருதுபவர் ஆயிரத்தில் ஒருவர் இருப்பாரா என்பது ஐயமே!
இக்காலத்திற்கேற்ப, பார்ப்பனர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவில்லையானால், எதிர்காலம் அவர்களுக்கு அழிவை நோக்கியதாகவே இருக்கும்.

பாரதீய சனதாவின் ஆதரவுடன் தேசிய முன்னணி ஆட்சியமைக்கும் பொழுதே, கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்துக் கட்டியதாகவே அதன் நிலை இருந்தது. அத்துவானியும், வாச்சுபேயும் பச்சைப் பார்ப்பனர்கள்! இந்தி - சமசுக்கிருத வெறியர்கள்! இராசாசி, மொரார்சி தேசாய் இருவரையும்விட நச்சுத் தன்மை மாறாத பார்ப்பனிய வெளிப்பாடுகள்! அவர்களுக்கு அரசியலைப் பற்றியோ, ஆட்சியைப் பற்றியோ, இந்தியாவைப் பற்றியோ, அல்லது இங்குள்ள பல்வேறின மக்களைப் பற்றியோ, துளியும் கவலையில்லை. அவர்களின் ஒட்டுமொத்தக் கவலை யெல்லாம், இந்தியாவில் வேரூன்றிய ஆரியத் தன்மையும் பார்ப்பனியத்தின் மத இன மேலாளுமைகளும் கொஞ்சமும் மாறிவிடக் கூடாது; ஆரியத் தலைமைக்குச் சரிவு வந்துவிடக் கூடாது என்பதுதான்.