பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/276

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


ஆக்கி, அன்றைய தமிழின அரசர்களையும் மக்களையும் ஏமாற்றி, ஒரு பெரிய அறிவு நல வரலாற்றையே அடிப்படையாக அமைத்துக்கொண்டனர்.

எப்படித் தமிழ்ச் சொற்களையெல்லாம் சமசுக்கிருதப் படுத்தினார்களோ, எப்படித் தமிழ்க் கலைகளை இயல், இசை, நாடகங்களை எல்லாம் ஆரியக் கலைகளாக உருமாற்றிப் பெயர் மாற்றி ஆரியப்படுத்தினார்களோ, அப்படியே பெருந் தமிழ்த் தெய்வங்களான சிவன், திருமால் ஆகியவற்றையும், திணை நிலத் தெய்வங்களான முருகன் (சேயோன்), கண்ணன்(மாயோன்) - (இவ்விடத்தில் ஓர் உண்மையை உணர்தல் வேண்டும். கண்ணன் வேறு; திருமால் வேறு. திருமால் இறைவியாகிய பெண் தெய்வம் ஆணாகி வந்த வழக்கும். கண்ணன்(கிருஷ்ணன்) இடையர் குல அரசன். இவனும் தமிழனே. பாண்டிய் குலத்தவன். யமுனை ஆற்றங்கரைக்குக் குடியேறிய பாண்டிய குலத்தினனாகிய சூரசேனனின் பெயரன். இவ்வளவில் இது போதும். மேலே விளக்கின் பெருகும்) - வேந்தன் (இவன் வேறு; ஆரிய இந்திரன் வேறு) வருணன் (இவன் வேறு; ஆரிய வருண பகவான் வேறு) இவன் தமிழரின் கடலும் கடல் சார்ந்த நிலமுமான நெய்தலுக்குத் தலைவன்; ஆரிய வர்ணபகவான் புயலுக்கும், கடலுக்கும் அதிகாரி), காளி (மண்), மாரி (மழை) - ஆகிய தெய்வங்களும் ஆரியப்படுத்தப் பட்டார்கள். ஆரியர்களின் வேதமதமே இந்துமதம். (இத் தெய்வ வரலாறுகளையெல்லாம் எம் திருக்குறள் மெய்ப்பொருளுரை நூலில் மிக விரிவாக எழுதுவோம்).

இக்கால் இந்திய ஆரியப் பார்ப்பனர்கள் இந்துமத அடிப்படைகள் தகரத் தொடங்கியவுடன், அவற்றை மேலும் வலுப்படுத்தவும், நிலைப்படுத்தவும் செய்கின்ற முயற்சிகளே பாபர் மசூதி - இராமன் பிறப்பு நிலப் போராட்டம் முதலியவை. ஆனால், இவற்றினும் மேலாக அவர்களைத் தாக்கக் கூவடிய விளைவுகளை உண்டாக்குபவை மண்டல்குழு பரிந்துரைகள். எனவேதான் அவற்றை இதுவரை யிருந்த பார்ப்பனிய அரசு செயல்படுத்த முன்வரவில்லை. வி.பி. சிங் தாம் அதைத் துணிந்து செயல்படுத்த முன்வந்தார்.

ஆட்சியாளர்கள் அடிக்கடி ஆட்சி மாறுவார்களானால், ஆளப்படுகின்ற மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நலன்கள் முறைப்படி கிடைக்கப் பெறா. ஆட்சியில் அமர்ந்துவிட்டவர்கள், எப்பொழுதும் தம் பதவிகளுக்கு இடையூறு நேர்ந்துவிடுமோ என்னும் அச்சத்துடன் விழிப்பாக இருந்துகொண்டு இருப்பார்களாகையால், ஆட்சி முறைகளில் மிகுந்த கவனத்தைச் செலுத்தாமல், அவ்வத்துறைகளின் நெறிகளையும்