பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/286

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


எங்குள்ளதென்று தெரியாத நிலையில் கனவு, கற்பனை நிலையில் கட்டப்படும் ஆண்டி மடங்கள் போலும் அழகு அழகுத் திட்டங்களாக மக்களைக் கவர்கின்ற வகையில் அறிவிக்கப் பெறுகின்றன !) விளம்பர, பகட்டு ஆரவாரத்தனமான நடைமுறைகள், ஊர்வலங்கள், சுற்றுலாக்கள், இலக்கம் இலக்கமாக, சிலவிடங்களில் கோடி கோடியாகப் பணத்தை விழுங்கும் பனைமரத்தின் அளவு உயர உயரமான செயலலிதாவின் வண்ண வண்ண வெட்டுருவங்கள், ஆயிரம் இயங்கிகள் புடைசூழ்ந்த பேரணிகள், ஊர்வலம், தம்மை மிகுதியாக மெச்சிக்கொள்ள வேண்டும் என்னும் தந்நல நோக்கம் கொண்ட இலவய வேட்டி சேலை அன்பளிப்பு நிகழ்ச்சிகள், அவற்றுக்கென அடிதடி பட்டுக்கொள்ளும் ஏழை, நடுத்தர மக்கள் கூட்டங்கள் - இன்னோரன்ன காட்சிகள் நாடெங்கும் நகரமெங்கும் நாள் தவறாமல் வேளை தெரியாமல் நடந்து வருகின்றன.

இவை ஒருபுறம் நாட்டை அதிரடித்துக் கொண்டிருக்க எதிர்க்கட்சிகளைப் பொய் வழக்குகளாலும், தேசியப் பாதுகாவல், படுகொடுமை வன்முறைத் தடுப்புச் சட்டங்கள், காவலர் உறுப்புச் சிதைவு (சித்திரவதைகள்), சிறைக் கொடுமைகள் முதலியவற்றால் அடக்கி ஒடுக்குகின்ற தன்மைகள் ஒருபுறம் நாட்டை அச்சுறுத்தி வெருவச் செய்கின்ற நிகழ்ச்சிகள்

இவற்றால் பார்ப்பனீயம் தான்தோன்றித் தனமாக வளர்ச்சி பெற்றுத் தலைகால் புரியாமல் ஆடுகின்ற நிலை, சாராயக் கடை, ஆட்சியதிகாரக் கையூட்டுப் பெருக்கங்கள், திரைப்படங்களில் பச்சை அருவருப்புக் காட்சிகள் ஆகியவற்றிடையே இந்துமத மூடநம்பிக்கை வளர்ச்சிகளுளம் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டு வளர்கின்றன.

இந்த அழிம்புத்தனமான ஆடம்பர ஆரவார நெருக்கடி நிலைகளுக்கிடையில்தான் கும்பகோணம் மகாமகம் பற்றிய கீழ்த்தகவான மூட நம்பிக்கை விளம்பரங்கள் அனைத்துச் செய்தித்தாள்களிலும் பக்கம் பக்கமாக வந்தன.

கடந்த காலங்களிலும் மகாமகங்கள் நடக்கத்தான் செய்தன. வழக்கமான பார்ப்பன விழாக்களைப் போல் அதுவும் ஒரு நடைமுறை விழாவாக வந்து போய்க் கொண்டிருந்தது. திருவண்ணாமலைத் தீவம்போல, திருப்பரங்குன்றத்தின் திருமுருகன் விழாப்போல, மதுரையில் மீனாட்சியம்மன் திருமண நிகழ்ச்சி போல - இதுவும் இயல்பான நிகழ்ச்சியாக வந்து போய்க்