பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

27

கொண்ட பாடல்களாகவே பொறுக்கியெடுத்து ஒலிபரப்பப்படுகின்றன. அதுவும் இரவு நேரங்களில் படுக்கையறைத் தொடர்பாகப் பச்சையான பொருள் தரக்கூடிய பாடல்களையே அங்குள்ள பார்ப்பனர்கள் தேர்ந்து ஒலிபரப்புகின்றனர். தமிழில் இசையும் இல்லை, நல்ல கருத்துள்ள பாடல்களுமில்லை என்று மக்கள் தாமே உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே அப்படிச் செய்கின்றனர். தமிழ்மொழியை, இசை, உரை, நாடகம் அனைத்துத் துறையிலும் இழிவுபடுத்த வேண்டுமென்பது இவர்கள் கருத்து. கருநாடக இசை என்பதாகக் கூறித் தெலுங்குத் தியாகராயர் பாடல்களே திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்படுகின்றன. இவை இரண்டையும் மாறி மாறி ஒலிபரப்புவதில் அவர்களுக்கு ஒர் உள்நோக்கம் இருப்பதாகவும் கூறலாம். தமிழ் மொழிப் பாடல்களைப் பகடி செய்வது போலும், தமிழ்ப் பாடல்கள் என்றால் இப்படித் தான் கீழ்த்தரமாக இருக்கும் என்று காட்டுவது போலும், மிகவும் இழிவான பொருள் தரும் இழுப்பிசைப் பாடல்களையே பொறுக்கி ஒலிபரப்புவது, அவர்களின் சமயக் கருத்துகள் நிறைந்த தெலுங்கிசைப் பாடல்களில் ஒர் உயர்ச்சியைக் காட்டுவதற்காகவே ஆகும். இல்லெனில், இக்காலத் திரைப்படப் பாடல்களிலேயே ஒரளவு உயர்ந்த பொருள் கொண்ட பாடல்களும் இருக்க அவற்றை விட்டு விட்டு, இழிந்த இசையும் பொருளும் கொண்ட பாடல்களையே பொறுக்கிப் போடுவார்களா?

நம்மவற்றின் இழிவையும் அவர்களின் சிறப்பையுமே விளம்பரப் படுத்துவது அவர்களின் பல்வேறு தந்திர முறைகளுள் ஒன்றாகும். அவர்களுக்கு எது பிடித்ததோ, சார்பானதோ அதைப் பனிமலை என்பார்கள். அவர்களுக்கு எதைப் பிடிக்காதோ, எது சார்பு இல்லாததோ, அதைக் குப்பைமேடு என்பார்கள். அவர்கள் கதைகளும் அவ்வாறான நோக்கில் வரைந்தவைதாம். இராமனை மாந்தருள் மிகவுயர்ந்தவனாகக் கற்பிப்பார்கள். இராவணனை (அவன் ஆரியர்களுக்கு மாறானவன் என்பதால்) மிகவும் தாழ்ந்தவனாகக் கற்பித்து உரைப்பார்கள். வானொலிப் பாடல்கள் தேர்விலும் அதில் வரும் கதை, நாடகங்கள், பாட்டுகள் இவற்றைக் கொண்டும் இவர்களுக்குத் தமிழ்மொழியின் மேல் உள்ள வெறுப்பையும் சமசுக்கிருதத்திலும் இவர்களின் வேத, புராண, இதிகாசங்களில் கொண்ட வெறியையும் நன்கு தெரிந்துகொள்ளலாம்.

தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு இவர்கள் நெடுநாட்களாக எதிர்பார்த்த ஒன்று. எப்பொழுது இராசாசியின் வாழ்த்தை மட்டும்