பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/293

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

291

இனி, நின்று கொண்டு பேய்ந்தவன்கள் ஓடிக்கொண்டே பேய்வான்கள். பார்ப்பனீய அட்டுழியத்திற்கும் அதிகாரத்திற்கும் அளவே இல்லையா?

இந்துமதந்தான் பார்ப்பனீயத்தின் ஆணி வேராகும். சாதிகள் பக்க வேர்கள்தாம்! எனவேதான் பார்ப்பனர்கள் இந்துமதத்தைப் பரப்புவதிலும், ஏழை, எளிய, கல்லாத, கரவு, வஞ்சனைகளில்லாத கீழ்த்தட்டுப் பேதை மக்களிடம் அதை வேரூன்றச் செய்வதிலும் இத்தனை ஆர்வமும், சூழ்ச்சியும், செருக்கும் கொள்கின்றனர். ஒருபுறம் அறிவியலை வளர்க்கப் பார்ப்பான் ஏதோ இவனுக்கு. மட்டிலுந்தான் அக்கறை இருப்பது போல் தம்பட்டம் அடிக்கிறான். மறுபுறம் ஆரியத்தை மத ஆணி அறைந்து யாராலும் அசைக்க முடியாதபடி வலுப்படுத்துகின்றான்.

மக்கள் திரண்டெழுந்து இக்கொடுமைகளை எதிர்க்காவிடில், எதிர்காலத்தில் எந்தத் துறையிலும் பார்ப்பனீயக் கருத்துகள் தவிர, வேறெதற்கும் இடமிருக்காது என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும்!

-தமிழ்நிலம், இதழ் எண் : 154, 1992