பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/294

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சாதி, மத மூடநம்பிக்கைகள் - முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகள்!

ந்த இந்திய நாட்டிற்கு வெளியேயிருந்து வந்த ஆரியர்கள். இந்நாட்டின் பழங்குடித் தமிழ்மக்களை வீரத்தால் வெல்ல முடியாமல், சூழ்ச்சிகளாலும் வலக்காரங்களாலும் மூடநம்பிக்கைகளான கருத்துகளைப் புகுத்தியும் அவர்களை ஒற்றுமை இழக்கச் செய்தும், வேறுவேறாகப் பிரித்தும், அவர்களுக்குள் பகைமை பாராட்டச் செய்தும், ஆட்சி இழக்கச் செய்தும் அடிமைப்படுத்தினர்; அறியாமையில் மூழ்கச்செய்தனர்; அவர்களை இழிவான பிறவிகள் எனத் தாழ்வுபடுத்தினர்.

நடு ஆசியாவின் குளிர்ப் பகுதியிலிருந்து அவர்கள் வந்ததால், வெப்ப நாடாகிய இந்நாட்டில் வாழ்ந்து வந்த பழங்குடித் தமிழ் மக்களைவிட ஆரியர்கள் நிறத்தால் வெளுத்தும் உருவத்தால் கொஞ்சம் திருத்தமுற்று அழகாகவும் இருந்தனர். பழந்தமிழ்க் குடிமக்களோ நிறத்தால் கொஞ்சம் கறுத்தும், உருவத்தால் சிறிது பொலிவு குறைந்தும் காணப்பெற்றனர்.

எனவே, ஆரியர் தங்களைத் தேவர்கள், பிராமணர்கள் என்றும், தாங்கள் பிரமதேவன் என்பவன் முகத்திலிருந்து பிறந்தவர்கள் என்றும், பொய்யாகவும் புளுகாகவும் கூறி, நம் பழந்தமிழ்க் குடிகளை நம்பும்படி