பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/296

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

துயரமும் பெற்று வாழவேண்டும் என்றும் கூறியும் எழுதியும் வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்தித் தங்கள் கருத்துகளுக்கு ஏற்ப உடன்படவும் செயல்படவும் செய்தனர்.

இவையுமன்றி, மக்களைப் பிரமதேவன். படைத்தான் என்றும், அவன் முகத்திலிருந்து படைக்கப் பெற்றவர்களே பிராமணர்களாகிய தாங்கள் என்றும், அவன் தோள்களிலிருந்து படைக்கப் பெற்றவர்களே சத்திரியர்கள் (அரசர்கள்) என்றும், தொடைகளிலிருந்து படைக்கப் பெற்றவர்களே வைசியர்கள்(வணிகர்கள்) என்றும், பாதங்களிலிருந்து படைக்கப் பெற்றவர்களே சூத்திரர்கள் (கீழ்நிலை அடிமை செய்பவர்கள்). என்றும் அவர்கள் பலவாறு கூறி, அவற்றுக்கு அடிப்படையாக வேதங்களைக் காட்டி நம்பச்செய்தனர்.

அத்துடன், அத்தகைய நான்கு பிறப்பினர்களும், வகுப்பினர்களும், இவ்வுலகில் ஆற்ற வேண்டிய கடமைகளை எழுதி வைத்து, அவற்றிற்குத் தர்மங்கள் என்று கூறி மக்களை அவற்றின்படி நடக்கவேண்டும் என்று.

அவர் எழுதி வைத்துக்கொண்ட வேதங்கள், இதிகாசங்கள். புராணங்கள், மனுதர்மம் போன்ற நூல்கள் அனைத்தும் மக்களினத்தை வேறு பிரிப்பன மக்களினத்துள் உயர்வு, தாழ்வுகள் கற்பிப்பன: அவர்களைப் பல மூட நம்பிக்கைகளுக்கும் அறியாமைகளுக்கும் உட்படுத்துவன அவர்களின் கருத்துகளுக்கு இந்துமதம் எனும் பெயர். கொடுத்து, மக்களை அவர்கள் மதச் சேற்றுக்கும், பல்வேறு சாதிப் பிரிவுகளுக்கும் உள்ளாக்கினர். பழந்தமிழ் இனத்தவர் அனைவரும் இச் சாதி, மதப் பிரிவுகளுக்கும், இழிவுகளுக்கும் ஆளாகிக் கிடந்த மூவாயிரம் ஆண்டுக் காலமாய் பலவேறு அடிமைத்தனங்களுக்கும், அறியாமைகளுக்கும், இழிவுகளுக்கும் உட்பட்டுத்கங்களுக்குள் வேறுபாடுகளை உருவாக்கிக் கொண்டு, ஒற்றுமையின்றி, முன்னேறாமல், தங்களுக்குள்ள பழஞ்சிறப்புகளை எல்லாம் இழந்து தவிக்கின்றனர். தாங்கள் தமிழர் என்பதையும், தங்கள் தாய்மொழி தமிழ் என்பதையும் மறந்து, இன்று அவர்கள் மீளா அடிமைகளாய், உரிமைகள் இழந்து, இவ்வுலக உருண்டையில், பல்வேறு நாடுகளுக்கு ஏதிலிகளாகச் சென்று. உழன்று, துன்பப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் தங்களுக்கென்று ஒரு நாடில்லாமல், அரச அமைப்பு இல்லாமல், பிற இனத்தவர்கள் தங்களை ஆளும்படி அடிமைகளாக இருந்து வருகின்றனர்.