பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

பெற்றுக்கொண்டு அவர் காட்டிய வழியைத் தி.மு.க.வினர் புறக்கணித்தனரோ அன்றிலிருந்தே தி.மு.க. அழிந்துபோக வேண்டும் என்பது இவர்கள் குறிக்கோள். கடந்த இடைத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறக்கூடாது என்பதற்காக இவர்கள் இல்லாத கடவுளர்களை யெல்லாம் வேண்டாத வேண்டுதல் செய்ததைத் தன்மானத் தமிழர்கள் நன்கு உணர்ந்திருக்கலாம். வானொலியிலும் இதே வகை வெறுப்பை அன்றாடம் இவர்கள் உமிழ்ந்து வருவதை அறிகையில் நாம் அவர்களின் அழிம்புகளை மற்தது, அவர்கள்மேல் அன்பு காட்ட முடியாது. திரு. ம.கோ. இராமச்சந்திரன் இவர்களுக்கு வேண்டியவராக என்றும் இருந்ததில்லை. திரைப்படங்களில் அவரின் ஆடல் பாடல்களும் உரையாடல்களும் தி.மு.கவைச் சார்ந்திருந்தமையால் அவரை இந்தப் பார்ப்பனர் என்றுமே வெறுத்து வந்துள்ளனர். ஆனால், அண்மையில் திரு. ம.கோ. இராமச்சந்திரன் ஆளுங்கட்சியாகிய தி.மு.க.வை வேறு சில அரசியல் காரணங்களுக்காகக் கண்டித்து வெளியேறி, வேறொரு கட்சியை அவர்களுக்கு எதிராகத் தொடங்கிக் கொண்டார் என்பதற்காகவே, அந்தப் பிரிவு ஏற்பட்ட நேரத்திலும் சரி, அதற்குப் பின்னும் சரி, திரைப்படங்களில் அவர் பாடுவன போல் உள்ள பாடல்களாகவே பார்த்துப் பொறுக்கி அவற்றையே ஒலிபரப்பி வந்ததையும் வருவதையும் உணர்கின்றவர்கள். இவர்களின் மனக் காழ்ப்பையும் நடுநிலை திறம்பிய குறும்புத் தனங்களையும் நன்றாக அறியலாம்.

சென்னை, திருச்சி, புதுவை ஆகிய மூன்று வானொலி நிலையங்களிலும், தில்லியில் உள்ள ‘விவித பாரதி'யிலும் பெரும்பாலும் ஆரியப் பார்ப்பனர்களே கொட்டமடித்து வருகின்றனர். அவற்றில் உள்ள பார்ப்பனத்திகள் பேசுகின்ற திண்ணைப் பேச்சுகளைத் தன்மானமுள்ள எந்தத் தமிழனாலும் காதுகொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. மொழிப் பற்றும், இனப் பற்றும் அற்ற தமிழின முண்டங்கள் சிலரின் தலையாட்டுதல்களே தமிழர்களின் ஒருமித்த கருத்துகளாகிவிட முடியாது.

புதுவை வானொலி நிலையத்தில் காலை நேரத்தில் ‘கிள்ளைகளே கேளுங்கள்’ என்னும் பகுதியில் அங்குள்ள பார்ப்பனத்தி ஒருத்தி ஒருநாள் கீழ்வருமாறு பள்ளி செல்லும் பிள்ளைக்கு அறிவு(!)றுத்தினாள்.

என்ன குழந்தைகளே! காலையில் ஸ்நானம் பண்ணி டிரஸ், செய்துகொண்டு ஸ்கலுக்குப் புறப்பட்டுட்டீங்களா? உங்கள் புக்ஸ்,