பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

29

நோட்புக்ஸ், பென்சில், பேனாக்களை யெல்லாம் டயம் டேபிள் பிரகாரம் கரெக்டா எடுத்து வச்சீட்டிங்களா? டிபன் சாப்பிடறதுக்குள்ளே நான் சொல்றதையுங் கேளுங்க’ என்று தொடங்கி ‘அவாள்’ பார்ப்பனச் சேரி மொழியிலே இரண்டு மூன்று நிமையயங்களிலே நஞ்சையே கொட்டினாள். இப் பார்ப்பனப் பெண் ஏதோ ஆங்கிலேயக் குழந்தைகட்குச் சொல்வது போல் தோன்றியதே தவிர, தமிழ்நாட்டில் உள்ள தமிழ்க் குழந்தைகளுக்குச் சொன்னதாகத் தெரியவில்லை. குளித்தலை ஸ்நானம் என்றதையும், உடையுடுத்தலை டிரஸ் செய்தல் என்றதையும், பொத்தகங்களையும், சுவடிகளையும் புக்ஸ், நோட்புக்ஸ் என்றதையும் பிற சொற்களையும் கேட்கும்பொழுது இவள் தமிழைக் கெடுப்பதற்காக வேண்டுமென்றே சொன்னதாகத் தெரிகின்றதே தவிர, அங்குள்ள ஆங்கிலச் சொற்களுக்குரிய தமிழ்ச் சொற்கள் அவளுக்குத் தெரியாமல் அப்படிச் சொல்லிவிட்டாள் என்று நினைக்கத் தோன்றவில்லை. இன்னொரு முறை அதே வானொலியில் அந்தப் பார்ப்பனத்தியே ‘மார்கழி’ மாதம் அதிகாலையில் எழுந்து குளித்துப் பாவைப் பாடல்களைப் பாராயணம் பண்ணினா, புயல் அடிக்காது; கடல் பொங்காது; பசுக்களெல்லாம் குடங் குடமாகப் பால் பொழியும்; பயிர்களெல்லாம் வானத்தளவு வளர்ந்து பயன் தரும்” என்று கூறுவதைக் கேட்க நேர்ந்தது.

அதற்குச் சில நாட்கள் முன்னர்தான் தமிழகம் கடுமையான புயலாலும், மழையாலும் மிகவும் துன்புற்றது. அந்த நேரத்தை எவ்வாறு தம் பழங் கருத்துகளுக்குப் பக்கத் துணையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் பார்ப்பனர் என்பதைப் பாருங்கள். இராமாயண, பாரதக் காலத்தில் உள்ள மக்களாக நம்மை கருதிக் கொண்டு அவள் புளுகினதைக் கேட்கையில் ஒருபுறம் எரிச்சலும், ஒருபுறம் வருத்தமும் வந்தன. இவ்வளவு உயர்ந்த கருவி இவர்களின் கைகளில் கிடைத்துக் கொண்டு, எவையெவற்றிற்கோ பயன்பட்டுச் சீரழிகின்றதே என்பதில் எரிச்சலும், நிலவு மண்டிலக் காலத்திலும் நம்மவர்களை இந்த ஆரியப் பார்ப்பனர்கள் இப்படி ஏமாற்றுவார்களானால் நம் முன்னோர்களை எப்படி ஏமாற்றியிருப்பார்கள் என்பதில் வருத்தமுமே எஞ்சின.

மேலும் வானொலியில் நடக்கும் அழிம்புகளைச் சொல்வதானால் ஏடே கொள்ளாது. அதில் கொள்ளை போகும் பணம் தமிழ்மொழியை அழிக்கவும், தமிழர்களை ஒடுக்கவுமே செலவிடப்பெறும் தமிழர் பணமாகும். அப்பணத்தைப் பார்ப்பனர்கள் பங்குபோட்டுக் கொள்ளும் வகைகளைச் சொல்லி