பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

31

எங்கேனும் ஒரு சிறிய இடிந்த கோவில் புதுப்பிக்கப் பெற்றுக் குடமுழுக்குச் செய்யப் பெற்றால்கூட அதன் மேளதா சங்கள் உட்பட அத்தனை நிக்ழச்சிகளையும் ஏதோ ஒர் ஊசைப் பார்ப்பானையோ, பார்ப்பனத்தியையோ விட்டு நேர்முக வண்ணனை செய்து வானொலியில் போட்டுவிடுவார்கள். ஒருமுறைக்கு இருமுறைகூட அத்தகைய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப் பெறுவதை ஊன்றிக் கவனிப்பார் அறிந்திருக்கலாம். அவர்கள் வீட்டுச் சமையல் திறங்கள் கூட, அம்மாமிகளால் அன்றாடம் வானொலியில் திக்கித் திக்கிச் சொல்லப் பெற்று அமர்க்களத்தப்படுகின்றது என்றால், பிறவற்றிற்குக் கேட்கவே வேண்டியதில்லை.

‘கிரிக்கெட்’ என்னும் மட்டைப்பந்து விளையாட்டின் நேர்முக வண்ணனையை வானொலியில் போடுவதுங்கூட அவாள் இனத்துக்கான ஒரு பொழுதுபோக்கிற்காகவே ஆகும். அக்காலங்களில் சிறிய வானொலிப் பெட்டியும் கையுமாக அலையும் அவாள் இனச் சில்லுண்டிகளும் இப்பி இளைஞர்களும் இளம் பெண்டிரும் தெருவுக்குத் தெரு, அலுவலகத்திற்கு அலுவலகம் அடிக்கும் கொட்டங்களுக்கு அளவே இல்லை. நம் இளைஞர்கள் அதில் அவ்வளவு ஈடுபாடு காட்டுவதே இல்லை. சிற்சில இடங்களில் அவர்களுடைய பகடிப் பேச்சுக்கு ஆளாகக் கூடாதே என்பதற்காக அவர்களுடன் சேர்ந்து தலையாட்டும் தமிழின இளைஞர்களைக் கூட அரிதாகத்தான் பார்க்கவியலும். அண்மையில் தஞ்சையில் உ.த.க. நடத்திய தமிழன் பிறந்தகக் கருத்தரங்குச் செய்தியை வானொலிக்கும் செய்தித்தாளுக்கும் அறிவித்திருந்தும் அதைப்பற்றி ஒரு செய்தியும் போடாத வானொலியும் பார்ப்பன இதழ்களும் திருவனந்தபுரத்தில் ஐந்து நாட்கள் நடத்திய இராமாயண ஆராய்ச்சி மாநாட்டைப் பற்றிய செய்திகளை மிகுந்த அளவில் விளம்பரப்படுத்தின. மொத்தத்தில் சொன்னால் வானொலி நிலையங்கள் பார்ப்பான் வீட்டுச் சமையலறைகள்! அவாள் இனம் சேர்ந்து அரட்டையடிக்கும் தெருத் திண்ணைகள்! அவர்கள் ஒருங்குகூடிப் பொழுதுபோக்கும் திருவல்லிக்கேணிக் கடற்கரைப் பகுதிகள் என்று சொல்லலாம்.

பொதுவாக வானொலித் துறையிலும் சரி, கலை, இசை, நாடகத் துறையிலும் சரி ஒன்றால் பார்ப்பானாக இருத்தல் வேண்டும்; அன்றால் அவனடி தழுவிய தமிழக் கேடர்களாகவோ, அவன் வேத, புராண, இதிகாசக் கருத்துகளைப் பரப்பும் வகையில் பாடுபடுபவனாகவோ இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான்