பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

33

குறிக்கப் பெற்றது, இராசாசி நினைவாலயத்துக்கு இவர்கள் தரும் விளம்பரம், காந்திக்குக்கூடத் தந்ததில்லை. ‘தமிழகத்தில் இராசாசி காலடிபட்ட இடங்களையெல்லாம் புண்ணிய தலமாகக் கருதவேண்டும்’ என்று ‘சுதந்திர’க் கட்சி சா. கணேசன் வெளிப்படுத்திய கருத்தை இவர்கள் மிகப் பெருமையுடன் வெளியிட்டுக் கொண்டனர். (சா. கணேசன் மூளையில் இவ்வளவு அடிமைத்தனம் புகுந்திருக்கக் கூடாது) துக்ளக்கில் ‘சோ’ இவர்கள் இனத் தலைவர் இராசாசியைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.

“இராசாசியைப் பாராட்டுவதற்கோ அல்லது அவரிடம் குற்றம் காண்பதற்கோ அவருக்கு நிகரானவர்கள் யாரும் இந்நாட்டில் இல்லாமல் போய்விட்டார்கள்.... மனம், சிந்தனை, வாக்கு, செயல் எல்லாவற்றிலும் பரிபூரணத் துய்மையுடன் விளங்கிய ஒரு அசாதாரணமான மனிதரை மிகச் சாதாரணமாக மதித்துவிட்ட மடத்தனத்தின் விளைவுகளிலிருந்து இந்த நாடு என்று விடுபடுமோ தெரியாது. இராசாசி தெய்வ நம்பிக்கை மிகுந்தவர். அந்த ஒரு கரணியத்திற்காகவாவது அவர் வாழ்ந்த இந்த ‘பூமி’யை இறைவன் காப்பாற்றட்டும்″.

– எப்படி? துக்ளக் ‘சோ’வின் தூக்கி வைத்துப் பேசும் தன்மை, ‘அவாள்’ இனத்துத் தலைவர் என்றால் உலகத்துக்கே தெய்வம்; அவர்களைவிட மேம்பட்டவன் ஒருவனும் இருக்க முடியாது; அல்லது இருக்கவும் கூடாது என்பது பார்ப்பனர்களின் ஒருமித்த கருத்து. இராசாசிக்கென்றே சில தனித்தன்மைகள் உண்டு. அவை அவருக்குத் தான் சொந்தம். அவர் தன்மைகள் பிறர்க்கு எப்படி வரும்? பெரியார் இராமசாமியின் தனித்தன்மைகள் எப்படி துக்ளக் இராமசாமிக்கு வரமுடியாதோ, அப்படியே இராசாசியின் தன்மைகள் ஒரு கந்தசாமிக்கு வரமுடியாது. மற்றபடி இராசாசி என்ன உலகத்துக்கே, அல்லது இந்தியாவுக்கே தெய்வமா? அவரைப் போல் நாட்டிற்கு உழைத்தவர்கள் இல்லையா? பார்ப்பன இனத்தலைவர் ஒருவர் இறந்துபோனால், அவர் வாழ்ந்ததற்காக இறைவன் இந்தப் பூமியைக் காப்பாற்றட்டும் என்றால் அவர் இருந்தபோது ஏன் இதைக் காப்பாற்றவில்லை? ‘துக்ளக்’ சோ ஏன் இறைவனிடம் அப்பொழுது பரிந்துரை செய்யவில்லை. இறைவன் என்றால் அவன் பார்ப்பன இனத்துக்கு மட்டுந்தானா சொந்தம்? அவர்களுடைய பாட்டனா அவன்?

இவற்றிலிருந்தெல்லாம் என்ன தெரிய வருகிறது என்றால் அவர்கள் எழுதும் எழுத்தெல்லாம் அச்சாகி வருவதற்கான