பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

35

கொள்ளவேண்டும் என்பதுதான் இந்தக் கோமாளியின் நோக்கம். மேலும் இந்தத் ‘துக்ளக்’ இராமசாமி வைத்த பிசாசு, உலக்கைக் கொழுந்து முதலிய பெயர்களைப் போலத்தான் இராமாயணத்திலும் தமிழர்களுக்கு இழிந்த பெயர்களே சூட்டப் பெற்றிருக்கின்றன. கும்பகர்ணன் (கும்பம் – குடம். கர்ணன் - காதன் = குடக்காதன்) மண்டோதரி (மண்டை - பானை, உதரம் - வயிறு - பானை வயிறி) சூர்ப்பநகை, (சூர்ப்பம் - முறம், நகை - பல் = முறப்பல்லி) இராவணன் (இரவு வண்ணன் - கறுப்பன்) முதலிய பெயர்களும் இழிவான பொருள் தரும்படி வைக்கப் பெற்றிருக்கின்றன.

நாம் அப் பெயர்களில் உள்ள இழிவுகளை அறியக்கூடாது என்பதற்காக அவை வடமொழியில் வைக்கப் பெற்றுள்ளதை அறியுங்கள். அந்த இராமாயண, மகாபாரதக் கதைகளிலெல்லாம் உள்ள இழிவுகளை எடுத்தெழுதினால் இவ்வேடு கொள்ளாது. இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே சென்னையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு பார்ப்பனன், நம் இனத்தைப் பார்த்து இவ்வாறு கிண்டல் செய்து எழுதுவதும், அதை நாம் பொறுத்துக் கொண்டிருப்பதும் நேருமானால் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவ்வினத்தினால் நேர்ந்த – முன்னோர் பட்ட – பாடுகளை நினைத்தும் பார்க்க முடியாதன்றோ? அக்காலக் கதைகளைச் சொல்லி இக்காலத்தில் அவர்களை வஞ்சம் தீர்க்க முடியாமற் போயினும், இக்காலத்தில் நம் கண்முன் நிகழும் அக் கொடுமைகளை நாம் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? எனவே நமக்கு அவர்கள் மேல் வளர்ந்துகொண்டு வரும் வெறுப்புணர்ச்சிக்குங்கூட அவர்களேதாம் பொறுப்பன்றி நாமோ நம் செயல்களோ பொறுப்பாவதில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இவற்றை உணர்ந்தோ உணராமலோ இரக்கத்துக்குரிய திரைப்படப் பாடலாசிரியர் கண்ணதாசன் என்னும் தமிழ்க் குடி(!)மகன் ‘துக்ளக்’ இதழின் மூன்றாம் ஆண்டு விழாவில், அங்குக் கூடியிருந்த கோமாளிக் கூட்டத்தைப் பார்த்து, “வரும் தேர்தலில் முறையாக முடிவுக்கு வர, துக்ளக் உங்களுக்கு வழிகாட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசியிருக்கின்றார். இதைவிட வெட்கங்கெட்ட தனம் வேறு என்ன இருக்க முடியும்? காமராசர் என்னும் தூய தமிழினத் தலைவனுக்குத் துக்ளக் என்னும் ஆரியப் பார்ப்பானைப் பரிந்துரைக்கச் சொல்லித் தான் ஒப்போலை தேடவேண்டுமா? வெட்கம்! வெட்கம்!