பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


வசதிகளை விஸ்தரிக்க முடிவு என்றும்,

‘கோவையில் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. என்பதை ‘கோவையில் ஸ்டிரைக் வாபஸ்’ என்றும்,

‘மன்னார்குடியில் உழவர்கள் ஊர்வலம்’ - என்பதை, ‘மன்னார்குடியில் கிஸான் ஊர்வலம்’ என்றும்,

முதல்வரிடம் வேண்டுகோள் என்பதை, ‘முதல்வரிடம் மகஜர்’ என்றும்,

‘முசுலீம் லீக் செயற்குழு தீர்மானம்’ - என்பதை முஸ்லிம் லீக் காரியக் கமிட்டி தீர்மானம்’ என்றும்,

‘பாதுகாப்புத் துறை மறுப்பு’ - என்பதைப் பாதுகாப்பு இலாகா மறுப்பு’ என்றும்,

மேட்டுர் நீர்மட்டம் - என்பதை மேட்டுர் ஜலமட்டம் என்றும்,

‘சரியாகக் கடைப்பிடிக்கவும் - என்பதைச் ‘சரியாக அனுஷ்டிக்கவும் என்றும் ‘ஆலைச்சிக்கல்’ என்பதை, ‘ஆலைத் தகராறு’ என்றும்,

‘கொள்ளைக்கூட்டம் பிடிபட்டது’ என்பதைக் ‘கொள்ளைக் கோஷ்டி பிடிபட்டது’ என்றும்,

- இன்னும் பலவாறும் வேண்டுமென்றே அவ்விதழ்கள் எழுதுவதைப் பார்த்தால், தமிழ்மொழியை எவ்வகையானும் அழிப்பதும், அதன் தனித்தன்மையையும் தூய்மையையும் கெடுத்து அதனை ஒரு புன்கலவைமொழி என்று ஆக்குவதுமே அவர்களுக்குத் தலையாய நோக்கம் என்று தெரியவில்லையா? தகராறு என்னும் சொல்லையோ இலாகா, கமிட்டி, கிஸான் என்னும் சொற்களையோ சமசுக்கிருத நூல்களில் ஆரியப் பார்ப்பனர்கள் பயன்படுத்துவார்களா என்பதைச் சுப்பிரமணிய, பத்தவச்சலத் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்மொழியின் தனித்தன்மையை அழித்து ஆரிய மொழியான சமசுகிருதத்திற்கு அடிமையாக்கி, அதன் வழித் தமிழினத்தை என்றென்றும் ஆரியத்திற்கு அடிமையாக்கி வைத்திருப்பதே அவர்களின் உள்ளக்கருத்து என்பதைக்கூட உணராமல், தலைக்கொழுப்பு மண்டிய சுப்பிரமணியன்கள் தில்லிச் சப்பாத்திக்கும், ஆரிய வெள்ளைத் தோலுக்கும் அடிமையாகி, ‘தனித்தமிழ் முயற்சி ஓர் அறியாமை முயற்சியே’ என்று தம்மை எல்லாம் அறிந்தவர்போல்