பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இராசாசி ஒர் அரசியல் நரி!

ந்தியா தன்னுரிமை பெற்றவுடன், அதற்கு வெள்ளைக்காரன் இட்ட அடிமை விலங்கு தகர்க்கப்பட்டதேயன்றி, இந்தியர்கள் தம்முள் தாமே இட்டுக்கொண்ட பல வகையான அடிமை விலங்குகள் இன்னும் உடைக்கப்படவில்லை. இப் பெரிய நிலப்பரப்பில் உள்ள மக்களில் ஒருபுறத்து மக்கள் அரசியல் உரிமையின்றியும், ஒருபுறத்து மக்கள் பொருளியல் உரிமையின்றியும், ஒருபுறத்து மக்கள் குமுகாய உரிமை இன்றியுமே கிடக்கின்றனர். தமிழகத்து மக்களோ குமுகாயம், அரசியல், பொருளியல் எனும் முத்துறையிலும் மூவகை விலங்குகளால் பிணிக்கப்பட்டு, உரிமையின்றிக் கிடக்கின்றனர். இக் கருத்து தமிழர் எனக் கூறப்படுபவர் பலருக்கும்கூட ஒப்புதலையாய் இராது என்பதை அறிவோம். ஆனால் அவ்வாறான ஒரு நிலையே அவர்கள் அவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதற்கு ஒரு பெரிய சான்றாகும். அடிமை தன்னை அடிமை என்று உணராத வரையில் தான் அடிமைப்பட்டுக் கிடப்பதை ஒப்பான் அல்லனோ? அவ்வாறு உணர்கையில்தான் உரிமை உணர்வு முளைக்கின்றது. அதுவே பின் விடுதலை வேட்கையாகக் கிளைக்கின்றது.

தமிழர்களைப் பொறுத்தமட்டில் இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய குமுகாய, அரசியல், பொருளியல், விடுதலைகளுக்குத் தடையாக விருப்பவர் முறையே பார்ப்பனரும், வடவரும், அவருள்ளிட்ட பெரும் முதலாளிகளுமே ஆவர். இம் முத்துறையிலும் இம் மூவரும் இன்று பகைவர்களாகவே இருந்து வருகின்றனர். குமுகாய நிலையில் தமிழர்களை அடிமைப்படுத்தியிருப்பன குல, சமயக் கட்டுப்பாடுகளும் அவற்றின் வழியாக வந்த அறியாமையும்