பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

97

ஆரியப் பார்ப்பனர் புறத்தே தம் குடுமிகளைப் பெரும்பாலும் களைந்து ஒழுகை(கிராப்) வாரிக்கொண்டிருந்தாலும், எப்படி தம் தம் சட்டைத் துணிக்குள் உடம்போடு உடம்பாக ஒட்டிக்கிடக்கும் பூணூலை அறுத்தெறியாமல் இருக்கின்றார்களோ, அப்படியே புறத்தே தமிழரைப் போலப் பேச்சிலும் செயலிலும் பண்பாட்டிலும் இருந்து வந்தாலும், உணர்விலும், குருதியோட்டத்திலும், மூளைச் சுணப்பிலும் இன்னும் ஆரியத்தன்மைகளை - பார்ப்பனப் புன்மைகளை - பிராமணர் செருக்கை விட்டுவிடவில்லை. இவர்கள் உடம்பில் பூணூல் புரளுவது போல் நெஞ்சில் இன்னும் வேறுபாடு புரண்டு கொண்டுதான் உள்ளது. நம் முகத்தோடு முகம் வைத்துப் பேசிக் கொண்டிருந்தாலும் அகத்தில் நம்மேல் உள்ள வெறுப்புணர்வு கனன்று கொண்டுதான் இருக்கின்றது. பார்ப்பனருள் நன்கு படித்தவரும் சரி; படியாதவரும் சரி; ஆண்களும் சரி; பெண்களும் சரி, எவராயினும் இந்நிலை வேறுபாட்டை நம்மால் அன்றும் பார்க்க முடியவில்லை; இன்றும் பார்க்க முடியவில்லை. பொதுவாக நாம் எப்படி உண்ணுவது, உரையாடுவது, உறங்குவது முதலிய எல்லாவற்றிலும் ஒன்றெனக் கலந்து கொண்டாலும், கொள்வது கொடுப்பது ஆகியவற்றில் நம் பிறப்பு, வளர்ப்பு, சாதி, குலம் முதலிய மலக் குட்டைகளிலேயே குளித்துக் கொள்ள விரும்புகின்றோமோ, அப்படியே ஆரியப் பார்ப்பனனும், தம் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் பிராமணக் குருதியில் சூடேறும் வரை நம்மைப் பூணூல் மேனியுடனேயே கட்டித் தழுவிக் கொள்கின்றான்; ஒட்டி உறவாடுகின்றான். ஆனால் அவன் உட்கணப்பு அவியாத தீ! ஈரம் உலராத களிமண் மனுநெறி மறவாத நெஞ்சம்! எனவே அவனுடைய பகையுணர்வு என்றும் நம் எதிரிலேயே நின்றுகொண்டுள்ளது சீனனைப் போல, ஒருகால் நாம் அமைந்துள்ள பொழுது அவனும் அமைந்துள்ளவன்போலக் காட்டிக்கொண்டாலும், நாம் கைதுரக்கு முன்பே அவன் அடித்துவிடும் மனவுணர்வில்தான் இன்றும் உள்ளான்; என்றும் இருப்பான் என்பதை உண்மைத் தமிழன் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவன் தெளிவான நம் புறப்பகை!

இனி, நம் அகப்பகையாக என்றென்றும் இருந்து வருகின்ற வீடனப், பிரகலாத, பக்தவத்சல, சுப்பிரமணியன்களைப் பற்றியும் நாம் என்றும் எச்சரிக்கையாக இருக்கவேண்டி இருக்கின்றது. இவர்கள் இனத்தால் தமிழரே எனினும் மனத்தால் ஆரியரே! இவர்கள் குடுமி வைத்துக் கொள்ளாத - பூணூல் அணியாத (ஒருவேளை அணிந்திருக்கின்றனரோ, நமக்குத் தெரியாது)