பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியராவது,
திராவிடராவது!


புதுப்புது எழுத்தாளர்கள் தோன்றி, விதம் விதமான தமிழ் நடைகள் விரிந்து வருவது மிகவும் விரும்பத்தகுந்த விளைவு. நாளுக்குநாள் எழுத்தாளர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகின்றது. அதற்குக் காரணம் பாமர மக்களிடையிலும் பத்திரிகைகளையும் புத்தகங்களையும், சஞ்சிகைகளையும் படிக்கிறவர்களுடைய தொகை பெருத்துவருவதாக இருக்கலாம். எழுத்துக்களின் இனங்களைப் பிரித்து அறிந்து பெருமை காணக்கூடிய திறமையும் வாசகர்களிடையே வளர்ந்திருக்கிறது. அந்த அறிவு பெண் மக்களிடையேயும் பெருகியிருப்பது பெருமை தரக்கூடியது. அதனால் தினுசுதினுசான எழுத்தாளர்