பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

பாஸ்கரத் தொண்டைமான்




3
ஆறெழுத்து மந்திரத்தான்

சமீபத்தில் நான் ஒரு கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு ஓர் தமிழ் அறிஞர் பேசிக் கொண்டிருந்தார். இடையே அப்பர் பாடலில் பிரபலமான பாடல் ஒன்றை எடுத்துச் சொன்னார். அந்தப் பாடல் இதுதான்;


நாம் யார்க்கும் குடி அல்லோம்
நமனை அஞ்சோம் நரகத்தில்
இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம், பிணி அறியோம்
பணிவோம் அல்லோம், இன்பமே
எந்நாளும் துன்பமில்லை
தாம் யார்க்கும் குடி அல்லாத்
தன்மையான சங்கரன் நற்
சங்க வெண்குழை ஓர்காதில்
கோமாற்கே நாம்என்றும்
மீளா ஆளாய்க் கொன்மலர்ச்
சேவடி இணையே குறுகினோமே.

இந்தப் பாடலை நான் மிகவும் அனுபவிப்பவன். சமண மதத்திலிருந்து சைவனாக மாறிய நாவுக்கரசரை சமண மன்னனாகிய மகேந்திரவர்மன் பலவிதங்களில் துன்புறுத்தியபோது அவனது ஆணைகளுக்கு அஞ்சாது எதிர்த்து நின்ற அடியாரது உளத்திண்மையை விளக்கும் அற்புதமான பாசுரம் என்று. இந்தப் பாடலை படித்து மகிழ்ந்தவன். ஆனால் பேச்சாளரோ இதைப் பற்றியோ, பாட்டின் பொருளைப் பற்றியோ, பாட்டைப்பாடிய அப்பர்