பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு ஏவல் செய்துகொண்டிருந்தது. அது சிவபெருமானது ஊர்தியாகிய காளையைக் கண்டு விருப்பம் கொண்டது. அதனை அறிந்த வசிட்டர் தருப்பை ஒன்றை எடுத்து எறிந்தார். உடனே அத்தருப்பை ஓர் இளங் கன்றாக மாறியது. அதனைக் கண்ட காமதேனுவுக்குத் தாய் அன்பு பெருகியது; அதன் பயனாக அதன் மடியிலிருந்து பால் வெளிப்பட்டது. அப்பாலே பாலாறாக உருவெடுத்தது. இது கந்தபுராணத்தில் காணப்படும் பாலாறு பற்றிய வரலாறு ஆகும்.

பெரிய புராணம் பாடிய சேக்கிழார் பெருமான் இவ் யாற்றைப் பற்றிக் கீழ்வருமாறு கூறியுள்ளார்:

'வசிட்ட முனிவர் மிகவுயர்ந்த தவத்தையுடையவர். அவர் நந்திமலையில் வசித்தார். அவரிடம் காமதேனு என் னும் தெய்வப் பசு இருந்தது. அது சொரிந்த பால், பெருகுகின்ற தீர்த்தமாக உருக்கொண்டு நந்திமலையி லிருந்து இறங்குகிறது; அங்ஙனம் இறங்கும்பொழுது மலையிலுள்ள முத்துக்களையும், அகிற்கட்டைகளையும் பல வகை மணிகளையும் வாரிக்கொண்டு வருகின்றது; சம வெளியில் உள்ள தாமரைக்குளங்களில் அவற்றை நிரப்பு கின்றது; கோடைக் காலத்தில் இவ் யாற்றில் நீர் வராது. அப்பொழுது உழவர் மணல் மேடுகளைப் பிசைந்து கால் உண்டாக்கி ஒழுங்கு செய்ய, நீர் ஊறிப் பெருகும். இங் ஙனம் பெருகுகின்ற நீர் ஆற்றின் இருபக்கங்களிலும் கால்வாய்கள் வழியே சென்று வயல்களிற் பாயும். அந் நீரின் பெருக்கினைத் தடுத்து வழிப்படுத்த மடைகள் அமைந்திருக்கும்.

'பாலாற்று நீர் வெள்ளப் பெருக்குடைய காலத்தில் பல குளங்களையும் ஏரிகளையும் நிரப்பும். அவற்றிற் கட்டப் பட்ட பெரும் காவலுடைய மதகுகள் திறந்துவிட, அவ் வாய்க்கால்களின் மூலம் நீர் சென்று கால்வாய்களின் வழியே பாயும். நீர் வரவினைக் கண்ட மள்ளர் மகிழ்ச்சி

9