பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக் கலை

மண்ணாலும் மரத்தாலும் உலோகங்களாலும் கல்லாலும் உருவங்களை அமைத்தல் சிற்பக் கலை எனப்படும். ஒவ்வொரு கோவில் கோபுரத்திலும் நிறைந்துள்ள உருவங்கள் சுதையாற் செய்யப்பட்டவை. ஒவ்வோர் உருவத்திலும் அதன் அமைப்பு, உடை, அணிகள், இன்ன பிறவும் விளக்கமாகத் தெரியும்படி அமைந்துள்ள வேலைப்பாடு எண்ணி மகிழத்தக்கது. இத்தகைய அமைப்பையே மரத்தில் செய்து காட்டுவது பெரிதும் போற்றத்தகுவதன்றோ? ஒவ்வொரு மரத்தேரிலும் உள்ள இத்தகைய மர வேலைப்பாட்டைக் கண்டு மனம் மகிழலாம். இம்மியளவும் பிழைபடாது செய்யப்பட்டுள்ள மர வேலையின் மாண்பு எண்ணிக் களிக்கத் தகும். ஒவ்வொரு கோவிலிலும் உள்ள செம்பு, பித்தளை உருவச் சிலைகள் கண்டு களிக்கத்தக்கவை. அவை அக்கலையில் வல்ல பெருமக்களால் செய்யப் பெற்றவை; கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பவை.

கற்களில் உருவங்களை அமைத்தல் மிக அரிய கலையாகும். ஒவ்வொரு கோவில் தூணிலும் தாமரைப் பூ, அழகிய உருவங்கள் முதலியன செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். தூணோடு இணைந்தாற்போலப் பல அடி உயரமுள்ள உருவங்கள் அமைக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடு விழிகட்கு விருந்தூட்டுவதாகும். மதுரை ஆயிரக்கால் மண்டபத்திலுள்ள குறவன் குறத்தி சிற்பங்கள் மிக நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. குறவனது உடற்கட்டுக் கம்பீரமானது; மார்பு அகன்று காணப்படுகிறது; அவன் அணிந்துள்ள அணிகள் பலவாகும். அவனுடைய உடலமைப்பும் முகத்தோற்றமும் அவனது உடல் உழைப்பை நன்கு உணர்த்துகின்றன.

குறத்தியின் சிற்பம் கவனிக்கத் தக்கது. அவள் நான்கு குழந்தைகளைப் பெற்றவள்; ஒரு குழந்தை அவள் கையைப் பிடித்துக்கொண்டுள்ளது. மற்றொன்று அவள் 99