பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதுகின்மீது இருக்கின்றது. வேறொன்று கூடையில் இருக்கின்றது. நான்காம் குழந்தை அவளது மார்பில் கட்டப்பட்டுள்ள துணியில் படுத்திருக்கிறது. குழந்தை இருக்கும் கூடை மிக கூடை மிக நுண்ணிய வேலைப்பாட்டுடன் காட்சியளிக்கிறது.

இத்தகைய தூண் சிற்பங்களேயன்றித் தனி உருவச் சிற்பங்கள் பல பாண்டிய நாட்டுக் கோவில்களில் உள்ளன. மதுரை மீனாட்சியம்மை கோவிலில் உள்ள இரதியின் சிலை,பிச்சாடனர் சிலை முதலியன கண்டு களிக்கத்தக்கவை. ஒவ்வொரு சிற்பத்திலும் ஆடை அணிகள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளமை, சிற்ப வேலையின் நுட்பத்தை வெள்ளிடை மலைபோல் விளக்குவதாகும். இவற்றை அமைத்த பெருமக்களின் கலையார்வத்தையும் கலைப்புல மையையும் எவ்வாறு பாராட்டவல்லோம்!

இசைக் கலை

பாண்டிய நாட்டுக் கோவில்களில் சைவத் திருமுறைகளும் திருவாய் மொழியும் இசைவாணரால் நன்கு பாடப் பெற்றன என்பதைப் பல கல்வெட்டுக்களால் அறிகின்றோம். பாணபத்திரன் பாண்டியன் அவைக்களத்தில் இசையரசனாக விளங்கினான். அவன் மனைவி பாண்டிமா தேவியாருக்கு இசைப்பயிற்சி அளித்து வந்தாள். ஈழத்துப் பாடினி ஒருத்திக்கும் மதுரைப் பாடினியாகிய பாணபத்திரன் மனைவிக்கும் இசைவாது நடைபெற்றது. அவ்வாதில் மதுரைப் பாடினியே வெற்றி பெற்றாள். இவ்விவரங்கள் திருவிளையாடற் புராணத்தில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. கி.பி.16ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் இசைக்கலை எந்த அளவு வளர்ச்சி பெற்றிருந்தது என்பதை, அக்காலத்தில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் பாடல்களால் நன்கு அறியலாம். நாயக்கராட்சியில் கருநாடக இசை கால் கொண்டது.

101