பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

யால் ஆரவாரம் செய்வர்; வயல்களைச் சேறு செய்வர்; செந்நெல்லினது முளைகளைச் சிதறி விதைத்து நாற்று நடுவர் ஒருபால்; மற்றொருபால் நாற்றைப் பறிப்பர்; வேறொருபால் நாற்று நடுவர். உழவின் வெவ்வேறு தொழில்களாகிய இவை பலவும் பற்பல இடங்களில் ஒரே காலத்தில் நிகழ்தலால் வயல்களிலிருந்து பேரோசை கிளம்பும்.

'நீர் வருகின்ற பெரிய கால்வாய்களை வாளை மீன்கள் குறுக்கிட்டுத் தடுக்கும். அதனால் அந்த நீர், தேக்கம் பெற்றுப் பெரிய கரைகள் உடைபடும்படி நீர்க் கால்கள் விலகிப்போகும். நீரையுடைய வயல்களில் சேல் மீன்கள் பல கூடும். அக்கூட்ட மிகுதியால் பள்ளமான வயல் கரைபோல மேடிட்டுப்போகும். வரால்கள் மதகினுள் புகுந்து நீர் வரும் வழியினை அடைக்கும். நீர்வள மிகுதி யால் வயல்களில் செந்தாமரை முளைத்து எழுந்து பூக்கும்; சூல்கொண்டு இளைத்த சங்குகள் தாமரை மலரில் ஏறித் தூங்கும். அம்மலர்களைச் சுற்றிலும் நெற்பயிர் பசுமை நிறத்துடன் காணப்படும். அந்நிலையில் அச்சங்குகளின் தோற்றம், பசிய வானத்தில் பரிவேடத்தால் வளைக்கப் பட்ட முழுமதியின் தோற்றம் போன்று இருக்கும். பசிய நெல் வயல்களைச் சுற்றிலும் தென்னை, வாழை, மா, பலா என்னும் மர வகைகள் வேலியாக அமைந்திருக்கும்.'

2. அரசர்

சங்ககாலத்தில்

பாலாறு பாயப்பெற்ற தொண்டைநாடு சங்ககாலத்தில் தொண்டைமான்கள் ஆட்சியிலிருந்தது. செங்கற்பட்டு வட ஆர்க்காடு மாவட்டங்களும், திருப்பதிவரையுள்ள சித்தூர் மாவட்டப்பகுதிகளும் நெல்லூர் மாவட்டத் தென்பகுதியும் சேர்ந்தது தொண்டைநாடு. தொண்டை மான் இளந்திரையன் என்பவன் காஞ்சியில் அரசனாக10