________________
இருந்து இந்நாட்டை ஆண்டு வந்தான். இவன் சிறந்த தமிழ்ப்புலவன். இவன் நற்றிணையில் மூன்றும் புறநானூற்றில் ஒன்றுமாக நான்கு செய்யுட்களைப் பாடியுள்ளான். இவன் சிறந்த வீரன் ; பாராட்டத்தக்க கொடைவள்ளல் ; இயல், இசை, நாடகப் புலவர்களை நன்கு ஆதரித்தவன்; பாணருக்குப் பொற்றாமரையும், விறலியருக்குப் பொன்மாலையும் வழங்கி வந்தவன். இவன் காலத்தில் பட்டினம் (இக்கால மகாபலிபுரம்) தொண்டை நாட்டுத் துறைமுகப் பட்டினமாக இருந்தது. குதிரைகளும் அயல்நாட்டுப் பொருள்களும் இத்துறைமுகத்தில் இறக்குமதியாயின.
ஒளவையார் காலத்தில் மற்றொரு மற்றொரு தொண்டைமான் காஞ்சியை ஆண்டான். அவன் அதியமான் ஆண்ட தகடூர் நாட்டின்மீது படையெடுக்க விரும்பினான். அதிய மானுக்கும் தொண்டைமானுக்கும் போர் நிகழலாகாது என்பதை விரும்பிய ஒளவையார், அதியமானது தூதராகத் தொண்டைமானிடம் சென்றார். தொண்டைமான் அம்மையாரை வரவேற்றுப் பெருவிருந்து நடத்தினான்; பின்பு தன் படைக்கலக் கொட்டிலைக் காட்டினான். அதனில் போருக்குரிய வேல்கள் முதலியன புத்தம் புதியனவாகக் காட்சியளித்தன. அவற்றைக் கண்ட ஒளவையார் தொண்டைமானை நோக்கி, 'இவை நெய் தடவப் பெற்று, மாலை அணியப் பெற்று, பீலி சூட்டப் பெற்று வரிசையாகவும் அழகாகவும் வைக்கப்பட்டுள்ளன. என் தலைவனாகிய அதியமானது போர்க்கருவிகள் ஓரமும் நுனியும் தேய்ந்து பழுது பார்க்கப்படுவதற்காகக் கொல்லனது உலைக்கூடத்தில் கிடக்கின்றன, என்று கூறினார்.
இக்கூற்றின் கருத்து யாது? தொண்டைமான் போர்க் கருவிகளைப் புதுக்கருக்கு அழியாமலே வைத்துள்ளான். அஃதாவது, அவன் போர்ப்பழக்கம் இல்லாதவன். அதிய மானது போர்க்கருவிகள் கொல்லனது உலைக்கூடத்தி11