லிருப்பதால், அவை போரில் நன்கு பயன்பட்டன என்பது பொருள். அஃதாவது அதியமான் போர் அநுபவம் உடையவன் என்பது கருத்து. போர் அநுபவம் வாய்ந்த அதியமானைப் போர் அநுபவமே இல்லாத தொண்டைமான் எதிர்ப்பின், வெற்றி பெறான் என்பது ஔவையார் கூற்றின் கருத்தாகும்.
சங்ககாலத்து இறுதியில் தொண்டைநாடு சோழ அரசுக்கு உட்பட்டிருந்தது. இளந்திரையன் என்பவன் அப்பொழுது காஞ்சியிலிருந்து அரசாண்டான் என்று மணிமேகலை என்னும் காவியம் கூறுகின்றது. அக்காலத்தில் அப்பகுதியில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது என்றும், பஞ்சத்தில் வருந்திய மக்களுக்கு மணிமேகலை உணவு வழங்கி உதவினாள் என்றும் அந்நூல் செப்புகின்றது.
சங்ககாலத்தில் காஞ்சி மாநகரம் சிறந்த பெளத்த இடமாக விளங்கியது. சைவ, வைணவ, சமண, பெளத்தக் கோவில்களும் மடங்களும் இருந்தன. கரிகாலன் என்னும் வேறொரு சோழ அரசன் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலைப் புதுப்பித்து, நகரையும் வளப்படுத்தினான் என்று நூல்கள் கூறுகின்றன.
பல்லவர் காலம்
சங்ககாலத்திற்குப் பிறகு ஏறத்தாழக் கி.பி.300இல் தொண்டைநாடு பல்லவர் என்னும் அயலவர் ஆட்சிக்கு உட்பட்டது. ஆயினும் ஏறத்தாழ 300 வருட காலம் அவர்கள் காஞ்சியில் நிலையாகத் தங்கித் தொண்டை நாட்டை ஆள முடியவில்லை. தொண்டைநாட்டிற்கு மேற்கே இருந்த கதம்பர்களும் தெற்கே இருந்த சோழ பாண்டியர்களும் பல்லவரை எதிர்த்துச் செய்த போர்களே இதற்குக் காரணமாகும். ஏறத்தாழக் கி.பி. 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் கி.பி. 900 வரை பல்லவர் காஞ்சியில் நிலையாக இருந்து நாடாண்டனர். அவருட்12