பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கத் தக்கவர் சிறப்பியல்புகளை மட்டும் இங்குக் காண்போம்.

முதலாம் மகேந்திர வர்மன் (கி. பி. 600-630)

இங்ஙனம் காஞ்சியில் நிலைத்து நாடாண்ட பல்லவருள் குறிப்பிடத்தக்க முதல்வன் மகேந்திர வர்மன் என்பவன். இவன் சாளுக்கியப் பேரரசனான இரண்டாம் புலிகேசியை வென்றவன்; இசை, நடனக்கலைகளில் தேர்ச்சி பெற்றவன். மலைச் சரிவுகளைக் குடைந்து கோவில்களை அமைத்த பெருந்தகை இவனே. இவனது ஆட்சி தெற்கே புதுக்கோட்டைவரை பரவியிருந்தது. இவன் முதலில் சமணனாக இருந்து திருநாவுக்கரசருக்குப் பெருந்தொல்லை விளைத்தவன்; பின்பு மனம் மாறிச் சைவனானவன். சித்தன்னவாசல் ஓவியங்கள் இவன் காலத்தில் தீட்டப் பட்டவையே என்பது ஆராய்ச்சியாளர் பலரது கருத்தாகும். இவன் வடமொழியில் மிகச் சிறந்த புலமை உடையவன். 'மத்த விலாசப் பிரகசனம்' என்னும் வேடிக்கை நாடக நூல் இவன் எழுதிய வடமொழி நூல்களுள் குறிப்பிடத்தக்கது.

முதலாம் நரசிம்ம வர்மன் (கி. பி. 630-668)

இவன் வைணவப் பற்று மிக்கவன்; தந்தையினும் சிறந்த போர் வீரன்; இரண்டாம் புலிகேசியை முற்றிலும் முறியடித்தவன்; அவனது தலைநகரான வாதாபியை அழித்தவன் ; புலிகேசியை வெற்றி கொண்டதால் மகா மல்லன் என்று தன்னை அழைத்துக்கொண்டவன். சங்ககாலப் 'பட்டினம் ' இவனால் புதுப்பிக்கப்பட்டு 'மகாமல்லபுரம்' எனப் பெயர் பெற்றது. அப்பெயரே நாளடைவில் ‘மாமல்லபுரம்' எனவும், 'மாமல்லை', 'மல்லை' எனவும் மருவி வழங்கலாயிற்று. இப்பேரரசன் மாமல்லபுரத்தில் சிறு சிறு குன்றுகளையே கோவிலாக மாற்ற முற்பட்டான். இவன் சிறந்த கடற்படையை வைத்திருந்தான். அப்படை13