பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் நந்தி வர்மன் (கி.பி.731-795)

இவனுக்குப் பல்லவ மல்லன் என்ற பெயரும் உண்டு. இவன் 65 ஆண்டுகள் அரசாண்டான். இவன் காலத்தில் வடமேற்கே இராட்டிரகூடரும், தெற்கில் சோழ பாண்டியரும் பல்லவ நாட்டைத் தாக்கினர். அரசியல் அறிவு வாய்ந்த இப்பல்லவன் இராட்டிரகூடர் மகளை மணந்து கொண்டான் ; சோழ பாண்டியரை முறியடித்தான். இவன் சிறந்த வைணவன். காஞ்சியிலுள்ள பரமேசுவர விண்ணகரம் என்னும் கோவில் இவனால் புதுப்பிக்கப்பட்டது. இவன் திருமங்கை ஆழ்வார் காலத்தவன். அப்பெரியார் இவ்வரசனைப் பல பாக்களில் பாராட்டியுள்ளார்.

மூன்றாம் நந்தி வர்மன் (கி. பி. 844-846)

பல்லவரும் இவனே கடைசிப் பேரரசன். இவன் சிறந்த சிவ பக்தன். சுந்தரரால் பாராட்டப்பெற்ற காட வர்கோன் இவனே என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். இவன் இராட்டிரகூட அரசனது மகளை மணந்தவன் ; சிறந்த தமிழறிஞன். தெள்ளாறு என்னும் இடத்தில் சேர, சோழ, பாண்டியரை முறியடித்தவன்; அதனால் 'தெள்ளாறு எறிந்த நந்தி வர்மன்' என்று பெயர் பெற்றவன். நந்திக் கலம்பகம் என்பது இவன்மீது பாடப் பட்டதே யாகும். அந்நூலைக் கொண்டு இவனுடைய போர்த்திறமை, தமிழ்ப்பற்று, கொடைத்தன்மை முதலிய வற்றை நன்கறியலாம். இவனது அவையில் பெருந்தேவனார் என்னும் புலவர் இருந்தார். அவர் பாரதக் கதையை வெண்பாவில் பாடினார். அது பாரத வெண்பா எனப் பெயர் பெறும். பல்லவர் வீழ்ச்சி

அபராசித வர்மன் பல்லவ அரசனாக இருந்த பொழுது (கி.பி. 880இல்) திருப்புறம்பியம் என்னும் இடத்தில் இரண்டாம் வரகுண பாண்டியனுக்கும் பல்லவனுக்கும்16