________________
போர் நடைபெற்றது. அப்போரில் தஞ்சையை ஆண்ட ஆதித்த சோழன் பல்லவர் பக்கம் சேர்ந்து போரிட்டான். பாண்டியன் முறியடிக்கப்பட்டான். சில ஆண்டுகளுள் அபராசிதன் கொல்லப்பட்டான். ஆதித்த சோழன் பல்லவ நாட்டையும் கைப்பற்றிக்கொண்டு சோழப் பெருநாட்டை ஏற்படுத்தினான்.
சோழராட்சி
ஏறத்தாழக் கி. பி. 900 முதல் 1300 1300 வரையில் தொண்டைநாடு சோழப் பேரரசர் ஆட்சியில் இருந்தது. அக்காலத்தில் தொண்டைநாடு 'சயங்கொண்ட சோழ மண்டலம்' எனப் பெயர் பெற்றிருந்தது. காஞ்சி மாநகரம் சோழப் பெருநாட்டின் வட பகுதிக்குத் தலைநகராயிருந்தது. காஞ்சியில் சோழர் அரண்மனை அரண்மனை ஒன்று அமைந்திருந்தது. முதற் குலோத்துங்கன் அந்த அரண்மனையில் இருந்தபொழுதுதான், கலிங்க நாட்டின்மீது படையெடுக்கும்படி கருணாகரத் தொண்டைமானுக்கு ஆணையிட்டான் என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது.
சோழருக்குப்பின்
சோழர்க்குப் பின்னர்த் தொண்டைநாடு விசய நகர வேந்தர் ஆட்சிக்கு உட்பட்டது; பின்பு கருநாடக நவாபின் ஆட்சிக்கும், அதற்குப் பின்னர் ஆங்கிலர் ஆட்சிக்கும் முறையே ஆட்பட்டது.
3. அரசியல்
அரசுரிமை
பல்லவர் அரசமுறை தந்தையினின்று மூத்த மகனுக்கு உரிமையானதாகவே தெரிகிறது. அரசுக்கு ஏற்ற மகன் இல்லாத காலங்களில் அரசனுடைய தம்பி மகன் பட்டத்தைப் பெறும் வழக்கம் இயல்பாக இருந்தது.அரசன் பிள்ளையில்லாமல் எதிர்பாராத நிலையில் இறந்து விடின், அமைச்சர் முதலான பொறுப்புடைய மக்கள்17 2