பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றுகூடி ஆலோசனை செய்து, அரச குடும்பத்தில் பிறந்த தக்க ஒருவனுக்கு முடிபுனை தலும் மரபாக இருந்தது. இம்முறை பற்றிய விவரங்கள் கல்வெட்டுக்களிலும் செப்புப் பட்டயங்களிலும் உள்ளன.

அமைச்சர் முதலியோர்

ஒவ்வொரு பல்லவ அரசர் காலத்திலும் அமைச்சர் பலர் இருந்தனர் என்பது கல்வெட்டுக்களால் தெரிகின்றது. பிரம்ம ஸ்ரீ ராஜன், நம்பன் இறையூர் உடையான், உத்தமசீலன், தமிழ்ப் பேரரையன் என்ற பெயர்களைக் கொண்ட அமைச்சர் பல்லவர் ஆட்சியில் இடம் பெற்றிருந்தனர். அரசர்க்கு ஆலோசனை கூறுதலும் ஆட்சியைக் கவனித்தலும் அமைச்சர் தொழில்களாக இருந்தன. உள்படு கருமத் தலைவர்', வாயில் கேட்போர்", கீழ் வாயில் கேட்போர்' முதலிய உயர் அலுவலாளரும் இருந்தனர்.

பல்லவர் படை

பல்லவர் யானை, குதிரை, காலாட்படைகளை வைத்திருந்தனர். ஒவ்வொரு படைக்கும் தனித்தனியே தலைவன் ஒருவன் இருந்தான். விஷ்ணு வர்மன், உதய சந்திரன், பூதி விக்கிரமகேசரி என்ற தானைத்தலைவர் பெயர்கள் பட்டயங்களிற் காணப்படுகின்றன. நரசிம்ம வர்மனது சேனைத் தலைவர் சிறுத்தொண்ட நாயனார் என்று பெரிய புராணம் கூறுகின்றது. போர்ப்பயிற்சி நிரம்பப்பெற்ற பல்லவர் படைவலிமையாற்றான் மகேந்திரன் தந்தையான சிம்ம விஷ்ணு சோழ நாட்டையும், நடு நாட்டையும் கைப்பற்றினான்; பல்லவ வேந்தர் சாளுக்கியரையும் கதம் பரையும், இராட்டிரகூடரையும் முறியடித்தனர்; சோழ பாண்டியரையும் அடிக்கடி போரிற் புறங்கண்டனர்; கப்பற் படையைக் கொண்டு இலங்கையில் தமக்குச் செல்வாக்கை ஏற்படுத்திக்கொண்டனர்.

1Private Secretaries 2Secretaries 3Under Secretaries18