பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுப் பிரிவுகள்

துங்கபத்திரை யாற்றுக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை மகேந்திரவர்மன் முதலிய பல்லவ மன்னர் ஆண்டனர். தமிழகத்திற்கு வடக்கேயிருந்த பல்லவநாடு பல 'விஷயங்களா?கப் பகுக்கப்பட்டிருந்தது. தொண்டைநாடு இருபத்துநான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பல்லவர் ஆட்சிக்கு உட்பட்ட சோழநாட்டின் பகுதி, நாடு, கூற்றம் என்று பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கோட்டத்திலும் நாடு, ஊர் என்னும் பிரிவுகள் இருந்தன. நாட்டை ஆட்சி நடத்தியவர் 'நாட்டார்' எனப்பட்டனர். ஊரை ஆண்ட அவையினர் 'ஊரவையார்' எனப்பட்டனர். அவர்கள் 'ஆள்வார்', 'ஆளுங் கணத்தார்' என்றும் அழைக்கப்பட்டனர்.


நாட்டார்க்கோ அல்லது ஊரவையார்க்கோ அரசன் விடுத்த ஓலை 'திருமுகம் ' எனப்பட்டது ; நாட்டார் அல்லது ஊரவையார் அதனை நிறைவேற்றிப் பொதுமக்களுக்கு அறிவிப்பது 'அறை ஓலை' எனப் பெயர் பெற்றது. ஊரார்' என்பவர் ஊர்ப் பெருமக்கள். இவர்களைக் கலந்தே ஆண்ட அவையினர் (ஆள்வார் ஊர் ஆட்சியைக் கவனித்தனர். ஊர் ஆட்சியினர், ஊரின் பல துறைகளையும் கவனிக்கத் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து வேலை செய்தனர். அவர்கள் ஏரிவாரியப் பெருமக்கள், தோட்டவாரியப் பெருமக்கள் என்றாற்போலத் தாம் மேற்கொண்ட வேலைக்கு ஏற்பப் பெயர் பெற்றிருந்தனர். கோவில் ஆட்சியைக் கவனித்து வந்தவர் 'அமிர்த கணத்தார்' எனப்பட்டனர்.

சிற்றூர்களில் மக்கள் வாழ்வதற்குரிய வீடுகள், நன் செய்-புன்செய் நிலங்கள், வீட்டுத்தோட்டங்கள், குளங்கள், ஊர்ப் பொது நிலங்கள், கடைத்தெரு, இடுகாடு-சுடு காடு, கோவில்கள், கோவிலுக்குரிய நிலங்கள் முதலியன இருந்தன. அரசாங்க அலுவலரால் நிலங்கள் அளக்கப்19