பட்டு எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தன. ஒவ்வோர் ஊரி லும் பயிர்த்தொழில் செய்பவரும், தட்டார், கொல்லர், தச் சர், வேட்கோவர், சலவைத் தொழிலாளர், நாவிதர், மேளக்காரர் முதலிய பலதிறப்பட்ட தொழிலாளரும் வாழ்ந்துவந்தனர்.
வேதங்களில் வல்ல பிராமணர் பொருட்டுப் புதியன வாக உண்டாக்கப்பட்ட ஊர்கள் பலவாகும். இவை புத் தூர், பிரமதேசம், பிரமபுரி, மங்கலம் எனப் பலவாறு பெயர் பெற்றன. இவ்வூர்கள் எத்தகைய வரியையும் அர சாங்கத்திற்குச் செலுத்த வேண்டாத நிலையில் அமைக் கப்பட்டவை. கோவில்களுக்கென்றே சிற்றூர்கள் பல வரி யின்றி விடப்பட்டன. அவை 'தேவதானச் சிற்றூர்கள்' எனப் பெயர்பெற்றிருந்தன. சமணப்பள்ளிகளுக்கு விடப் பட்ட நிலங்களுக்குப் 'பள்ளிச்சந்தம்' எனப் பெயர் வழங்கயது.
கோவில்கள் கோவிலில் ஒவ்வொரு வேலையையும் கவனிக்கப் பணி மக்கள் இருந்தனர். விழாக்கள் அவ்வப்போது சிறப்பாக நடைபெற்றன. அரசரும் பிறரும் கோவிலுக்கு நிலத்தை யும் பொன்னையும் பிற பொருள்களையும் வழங்கினர். கோவிலை அடுத்து இருந்த மடத்தில் சமயக் கல்வியும் யாத்ரீகருக்கு உணவும் வழங்கப்பட்டன.
அறங்கூறவையம் இக்காலத்தில் ஒவ்வொரு நாட்டிலும் உயர் நீதிமன்றம் இருத்தல்போல அக்காலத்தில் இருந்தது என்று கூற இயலவில்லை. ஊர் வழக்குகளை ஊர் அவையினரே தீர்த்து வைத்தனர். மிகப் பெரிய வழக்குகளைத் தலைநகரத்தி லிருந்த அறங்கூறு அவையம் தீர்த்து வைத்ததுபோலும்! கல்வெட்டுக்களிலும் பல்லவர் கால நூல்களிலும் அதிகர ணம், தருமாசனம் என்னும் பெயர்கள் காணப்படுகின் றன. 'அதிகரணம்' என்பது குற்ற வழக்குகளை விசாரிக் 20