________________
கும் மன்றம் எனவும், 'தருமாசனம்' என்பது பிற வழக்குகளை விசாரிக்கும் மன்றம் எனவும் ஆராய்ச்சியா ளர் கூறுகின்றனர்.
பல்லவர் இலச்சினை
சேரர்க்கு வில்லும், சோழர்க்குப் புலியும், பாண்டி யர்க்கு மீனும் இலச்சினையாக அமைந்தாற்போலப் பல்ல வர்க்கு நந்தி இலச்சினையாயிற்று. இரண்டு பக்கங்களி லும் உயர்ந்த விளக்குகள் இருக்க அவற்றுக்கு இடையே நந்தி அமர்ந்துள்ளதுபோலப் பல்லவர் இலச்சினை அமைந் துள்ளது. பல்லவர் கொடியிலும் நந்தி உருவமே தீட்டப் பட்டது. அவர்தம் காசுகளிலும் நந்தி இருத்தலைக் காண லாம். நாணயங்கள்
பல்லவர் காசுகள் செம்பு, வெள்ளி, பொன் முதலிய உலோகங்களால் செய்யப்பட்டன. பெரும்பாலான காசு கள் நந்தி இலச்சினையைப் பெற்றவை. இரண்டு பாய்மரக் கப்பல் இலச்சினை கொண்டவை சில. நந்தி இலச்சினை பல்லவரது சமயப்பற்றினைக் குறிக்கும். பாய்மரக்கப்பல் இலச்சினை அவர்களது கடல் வாணிகச் சிறப்பை விளக் குவதாகும். எல்லாக் காசுகளும் மிகச் சிறந்த வேலைப் பாடு கொண்டவை. நந்தி முத்திரைகொண்ட சில காசு களில் ஸ்ரீபரன், ஸ்ரீநிதி என்பன குறிக்கப்பட்டுள்ளன. நந்தி இலச்சினைக்குமேல் 'மானபர' என்று பொறிக்கப் பட்டுள்ள காசுகள் சிலவாகும். பல்லவர் கல்வெட்டுக்களி லும் செப்பேடுகளிலும் பொன் காசுகள் இருந்தமை குறிக்கப்பட்டுள்ளன.
அளவைகள் பல்லவர் காலத்தில் குழி, வேலி, என்பன நில அளவை களாக இருந்தன. இவற்றோடு நாலு சாண் கோல்,பன் 21