பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

னிரு சாண் கோல், பதினாறு சாண் கோல் முதலிய நீட்டல் அளவைகளும் இருந்தன.

நாழி, உழக்கு, உரி, பிடி,சோடு, மரக்கால், பதக்கு, குறுணி,காடி,கலம் என்பன முகத்தல் அளவைப் பெயர் கள். கருநாழி, பிழையா நாழி என நாழிகள் பல பெயர் களைப் பெற்றிருந்தன. நிருபதுங்கவர்மன் மனைவியின் பெயர் பிருதிவீ மாணிக்கம் என்பது. அவள் பெயரால் 'பிருதிவீ மாணிக்கஉரி' என்ற ஒரு முகத்தல் அளவை இருந்தது.

பொன் முதலியவற்றை நிறுக்கக் கழஞ்சு, மஞ்சாடி என்னும் நிறைகள் பயன்பட்டன.

வரிகள்

தென்னை, பனை, பாக்கு முதலிய பயன் தரத்தக்க மரங் களைப் பயிராக்க வரி செலுத்தப்பட்டது. கள் இறக்க வரி, பனஞ்சாறு இறக்க வரி, பாக்குக்கு வரி என ஒவ்வொரு துறையிலும் வரி வாங்கப்பட்டது. நோய்களை நீக்கவல்ல செங்கொடிவேலி, கரிசலாங் கண்ணி முதலிய செடி கொடிகளைப் பயிரிடவும் வரி விதிக்கப்பட்டது. மருக் கொழுந்து முதலிய மணம் தரத்தக்க செடிகளையும், மலர் தரத்தக்க செடிகளையும் பயிராக்க வரி விதிக்கப்பட்டது. கால்நடைகளால் பிழைப்பவர், ஆடை விற்பவர், வேட் கோவர், தச்சர், கொல்லர், கன்னார், பொற்கொல்லர், சல வைத் தொழிலாளர், செக்கார், நெசவாளர், நூல்நூற்ப வர், மீன் பிடிப்பவர், நெய் விற்பவர், தரகர் முதலிய பல வகைத் தொழிலாளரும் அரசாங்கத்திற்கு வரி செலுத்தினர்.

நீர்ப்பாசன வசதிகள்

தொண்டை நாட்டு ஆறுகளில் தண்ணீர்ப் பெருக் கெடுத்து வரும்போது, அந்நீரைத் தேக்கி வைத்து, வேண் டும்போது வயல்களுக்குப் பாய்ச்சுவதற்காகப் பெரிய ஏரி 22