________________
கள் பல, பல்லவரால் அமைக்கப்பட்டன. மகேந்திர தடா கம், சித்திரமேக தடாகம், பரமேசுவர தடாகம், வைர மேகன் தடாகம், வாலி ஏரி,மாரிப் பிடுகு ஏரி, கனக வல்லி தடாகம் எனப் பல ஏரிகளின் பெயர்கள் கல் வெட்டுக்களிற் காணப்படுகின்றன. ஆற்று நீர் பல வாய்க் கால்கள் வழியாக நாட்டின் பல பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவற்றுள் வைரமேகன் வாய்க்கால், பெரும்பிடுகு வாய்க்கால் என்னும் இரண்டும் கல்வெட்டுக் களில் இடம் பெற்றுள்ளன.
கைத்தொழிலும் வாணிகமும்
நெசவுத்தொழில், தச்சுத்தொழில், கட்டடத்தொழில், பொற்கொல்லத் தொழில் முதலிய பலவகைத் தொழில் கள் தொண்டைநாட்டில் நடைபெற்று வந்தன. வேல், ஈட்டி முதலிய போர்க் கருவிகளைச் செய்தவர் பலராக இருந்தனர். தொண்டை நாட்டு விளை பொருள்களும் செய் பொருள்களும் தென்னிந்தியாவின் பல பகுதிகட்கும் அனுப்பப்பெற்றன ; அப்பகுதிகளின் விளைபொருள்களும் செய்பொருள்களும் தொண்டைநாட்டில் விலையாயின. இங்ஙனம் உள் நாட்டு வாணிகம் சிறப்புற நடைபெற்றது. தொண்டைநாட்டை ஆண்ட பல்லவரிடமும், சோழ ரிடமும் கடற்படை இருந்தது. அவர்கள் கடல் வாணி கத்தை வளமுற வளர்த்தனர். மாமல்லபுரம் தொண்டை நாட்டின் சிறந்த துறைமுகப்பட்டினமாக விளங்கியது. தொண்டை நாட்டு வணிகர் மலேயா முதலிய கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தனர். பல்லவ வேந்தர் சீனரோடு உறவு கொண்டிருந்தனர் என் பதைச் சீன ஏடுகள் குறிக்கின்றன.
சமுதாய வாழ்க்கை
பல்லவ மன்னர் அறநூல்களின்படியே குடிமக்களை ஆட்சி புரிந்துவந்தனர். அரசன் முதல் ஆண்டி ஈறாக 23