பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இருந்த அனைவரும் வழி வழியாகத் தம் முன்னோர் செய்துவந்த தொழில்களைச் செய்து வந்தனர். மன்னன் அறநூல் வழி ஆட்சி நடத்தியதால், சமுதாயத்தில் குழப் பம் இல்லை. போர்க் காலங்களில் மட்டும் நாட்டில் பஞ் சங்கள் ஏற்பட்டன. அரசன் மிக முயன்று குடிகளின் துன்பத்தைப் போக்கிவந்தான்.

சங்ககாலத்திற்குப் பிறகு தமிழகத்தில் கோவில்கள் மிகுதிப்பட்டன; வழிபாட்டு முறைகள் பெருகின. வட மொழி செல்வாக்குப் பெற்றது. இவற்றின் காரணமாக வடமொழியிலும் தென்மொழியிலும் சமய நூல்கள் தோன்றின. இராமாயணம், மகா பாரதம் போன்ற இதி காச நூல்கள் பொது மக்களுக்குப் படித்து விளக்கப்பட் டன. பொதுமக்கள் இவ்வுலக வாழ்க்கைக்காகத் தொழி லில் ஈடுபட்டனர்; மறு வுலக வாழ்க்கைக்காகச் சமயத் துறையில் ஊக்கம் காட்டினர்.

                  4. இலக்கியச் சிறப்பு

வடமொழி நூல்கள்

பல்லவர் காலத்தில் வடமொழி நல்ல முறையில் வளர்ச்சி அடைந்திருந்தது. பல்லவர் அவைக்களத்தில் பாரவி, தண்டியாசிரியர் போன்ற சிறந்த வடமொழிப் புலவர்கள் இருந்தார்கள். லோகவிபாகம், கிராதார்ச்சுனீ யம், அவந்தி சுந்தரி கதா, மத்த விலாசப் பிரகசனம், காவியாதரிசம் போன்றவை பல்லவர் கால வடமொழி நூல்களாகும் வடமொழிப் பட்டயங்கள்

பல்லவர்களின் பட்டயங்க வடமொழியில் எழுதப் பட்டன. முதலாம் பரமேசுவர வர்மன் கூரம்பட்டயம் என்பதனை வெளியிட்டான். அப்பட்டயத்துள் கூறப்படும் பெருவள நல்லூர்ப் போர் வருணனை படித்து மகிழ்தற் 24