________________
குரியதாகும். அப்பட்டயத்தை எழுதியவர் சிறந்த வட மொழிப் புலவராவர். இரண்டாம் நந்தி வர்மன் வெளி யிட்ட காசக்குடிப் பட்டயம் பல்லவர் வரலாற்றை நன்கு விளக்குவதாகும். மூன்றாம் நந்திவர்மனுடைய வேலூர்ப் பாளையப் பட்டயத்தில் வடமொழிநடை மிகச்சிறந்து அமைந்துள்ளது.
பல்லவரும் தமிழும்
மகேந்திர வர்மன், இரண்டாம் நந்தி வர்மன், மூன் றாம் நந்திவர்மன், அபாரசிதவர்மன் ஆகிய இவர்களே தமிழறிவு பெற்றிருந்த பல்லவப் பேரரசர்கள். இச்செய்தி யினைத் திருமங்கையாழ்வார் பாடல்கள், நந்திக் கலம் பகப் பாடல்கள், திருத்தணிகைக் கல்வெட்டிலுள்ள வெண்பா, தமிழ் உரைப்பகுதிகளில் காணப்படும் தனிப் பாடல்கள் ஆகியவை வற்புறுத்துகின்றன. வடமொழியி லும் தென்மொழியிலும் புலமை பெற்ற ஐயடிகள் காடவர் கோன் என்ற பல்லவ அரசர் 'சிவத்தளி வெண்பா' என் னும் நூல் பாடினார் என்று பெரிய புராணம் குறிக்கின் றது.
சிவத்தளி வெண்பா
இஃது, 'இறக்கும் தறுவாயில் நேரும் துன்பங்களை அடையாமுன், இன்னின்ன ஊர்க்கோவிலில் வாழும் இறைவனை நினை,' என்று மனத்திற்கு அறிவுறுத்துவதாக அமைந்த வெண்பாக்களின் தொகுதியாகும். தில்லை, குடந்தை, ஐயாறு,ஆரூர்,திருத்துருத்தி, திருக்கோடிகா, பாண்டவாய்த் தென்னிடைவாய், திருநெடுங்களம், குழித் தண்டலை, ஆனைக்கா, மயிலை, சேனை மாகாளம்,வளை குளம், சாய்க்காடு, திருப்பாச்சிலாச்சிரமம், சிராமலை, திருமழபாடி, திரு ஆப்பாடி, காஞ்சீபுரம், திருப்பனந் தாள், திருவொற்றியூர், திருக்கடவூர் முதலிய தளிகள் இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளன. 25