பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மத்தவிலாசப் பிரகசனம் இது வடமொழியில் எழுதப்பட்ட வேடிக்கை நாடகம். உடலெல்லாம் நீறு பூசிய காபாலிகச் சைவனொருவன் தன்னைப்போலவே மது அருந்திய காபாலினி ஒருத்தி யுடன் காஞ்சிமா நகரத் தெரு ஒன்றில் நடந்துவருகிறான்; ஓரிடத்தில் தங்குகிறான். அவனது காபாலம் ஒரு நாயால் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வமயம், அவ்வழியே துவராடை உடுத்த பௌத்த பிக்கு ஒருவன் வருகிறான். அவன் தனது பிச்சைப் பாத்திரத்தில் இறைச்சி வைத் திருக்கிறான்; அதனால் அதனைத் தன் கட்கத்தில் இடுக்கி, மேலாடையால் மறைத்துக்கொண்டு நடந்து வருகிறான். அவ்வுண்மையை அறியாத காபாலிகன் தனது காபாலத் தைத்தான் அந்தப் பிக்கு மறைத்து வைத்திருக்கிறான் என்று தவறாக எண்ணி, அவன் கையை இழுக்கிறான். நடுத்தெருவில் பிச்சைப் பாத்திரம் விழுந்துவிடின், அத னுள் வைத்துள்ள இறைச்சி வெளிப்படுமே என்று அஞ் சிய பிக்கு, அப்பாத்திரத்தைக் கையில் அழுத்தமாக இடுக்கிக்கொண்டு பேசுகிறான். இந்நிலையில் குடிவெறியில் இருந்த காபாலினி காபாலிகனை நோக்கி, 'இந்தப் பிக்கு செல்வம் பொருந்திய பௌத்த மடத்தைச் சேர்ந்தவன். இவன்மீது வழக்குத் தொடுத்தால், இவன் தன் மடத் துப் பொருளைக்கொண்டு அறங்கூறவையத்தார் வாயை அடைத்து விடுவான், என்று கூறுகிறாள். அவ்வமயம் ஒழுக்கம் கெட்ட பாசுபதச் சைவன் ஒருவன் அங்கு வருகின்றான். அவனிடம் காபாலிகனும் பௌத்த பிக்கு வும் நடந்ததைக் கூறுகின்றனர். அவ்வமயம் நாயால் கொண்டு செல்லப்பட்ட காபாலம் கிடைத்து விடுகிறது. இவ்வேடிக்கை நாடகத்தில், இதனைச் செய்த மகேந்திர வர்மன் இசைக்கலையைப் பலபடப் பாராட்டியுள்ளான்; காபாலிகர், பௌத்தர் முதலியோரது ஒழுக்கக் கேட்டைப் புலப்படுத்தியுள்ளான்; தன் ஆட்சிக்குட்பட்ட அறங்கூற 26