________________
வையத்தார் கையூட்டு வாங்கிக்கொண்டு நெறி தவறி வழக்கில் முடிவு கூறலும் உண்டு என்பதையும் குறிப்பாக உணர்த்தியுள்ளான். இந் நாடகம் தமிழில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளது.
அருட்பாடல்கள்
திருமயிலாப்பூர், திருவொற்றியூர், திருஇடைச்சுரம், திருஅச்சிறுபாக்கம், திருப்பாலைத்துறை, திருவேற்காடு, திருஆலங்காடு, முதலியன தொண்டைநாட்டுச் சிவத் தலங்களாகும். திருப்பதி, திருஎவ்வுளூர் (திருவள்ளூர்), காஞ்சி, முதலியன சிறந்த வைணவப்பதிகளாகும். இவை யெல்லாம் முறையே நாயன்மார்களாலும், ஆழ்வார்களா லும் பாடப்பெற்ற சிறப்புடையவை. இவை பற்றிய பாடல் களெல்லாம் தொண்டைநாட்டுச் சமய இலக்கியமாகும்.
நந்திக் கலம்பகம்
இந்நூல் ஏறத்தாழ நூறு பாக்களைக் கொண்டது; மூன்றாம் நந்திவர்மனைப் பற்றியது; இன்றுள்ள கலம்பக நூல்களுள் காலத்தால் முற்பட்டது. மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் நடைபெற்ற போர்கள், அவன் பெற்ற வெற்றி கள், அவனது தமிழ்ப்புலமை, கொடைத்தன்மை இன்ன பிறவும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அவனது வர லாற்றை அறிய இச்சிறுநூல் பெருந்துணை புரியவல்லது.
பாரத வெண்பா
இதனைப் பாடிய பெருந்தேவனார் சங்ககாலத்துப் பார தம் பாடிய பெருந்தேவனாரின் வேறுபட்டவர். இவர் இந் நூலில், மூன்றாம் நந்திவர்மன் செய்த தெள்ளாற்றுப் போரைக் குறித்துள்ளார். இப்புலவர் சிறந்த வைணவர் என்பது, இந்நூலிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாக்களால் தெரிகிறது. திருவேங்கடம், திருமாலிருஞ்சோலைமலை (அழகர்மலை), திருவரங்கம், திருவத்தியூர் என்னும் வைணவத் தலங்கள் இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளன. 27