பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இதனால் இத்தலங்கள் இவர் காலத்தில் மிக்க சிறப்புற்றன வாக இருந்தன என்பது தெரிகிறது.

பெரிய புராணம்

கி.பி.12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தொண்டை நாட்டுப் புலவரான சேக்கிழார் செய்ததே பெரிய புராணம் என்பது. இந்நூலின் சிறப்பை அடுத்த பகுதியிற் காண்க. இந்நூலுள் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் தொண்டைநாட்டு வருணனை பல பாக்களில் இடம் பெற் றுள்ளன. பாலாற்றின் சிறப்பு நன்கு சுட்டப்பட்டுள்ளது. பின் நூற்றாண்டுகளில் சைவ சமயத்தை வளர்க்கப் பெருந்துணையாக இருந்த இப்பெரிய புராணத்தைச் செய்த பெரியார் தொண்டை நாட்டவர் என்ப தொன்றே, தொண்டைநாட்டின் சிறப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நள வெண்பா

வெண்பாவிற் புகழேந்தி' என்று புகழப்பெற்ற புக ழேந்திப் புலவர் தொண்டைநாட்டுப் பொன்விளைந்த களத் தூரில் பிறந்தவர். இவர் இயற்றிய நள வெண்பா சொற் சுவையும் பொருட்சுவையும் செறிந்தது; 424 வெண்பாக் களை உடையது; அழகிய உவமைகளைக் கொண்டது; சிறந்த கருத்துக்களைப் பெற்றது; நளனது வரலாற்றை நன்கு எடுத்து இயம்புகிறது; ஞாயிறு திங்கள்களின் தோற்றம், மறைவு, பொழில் விளையாட்டு, மகப்பேற்றின் சிறப்பு, சூதாட்டத்தின் தீமை முதலியவற்றைக் குறிக்கும் பாடல்கள் படித்துச் சுவைக்கத் தக்கவை. புகழேந்தியின் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டு.

கந்த புராணம்

கச்சியப்ப சிவாசாரியார் என்னும் புலவர் பெருமானே இப்பெருநூலைப் பாடியவர். இந்நூல் முருகப் பெருமா 28