பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

னின் வரலாற்றை விரித்துக் கூறுவது. இந்நூல் காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் அரங்கேற்றப்பெற்றது.

அந்தகக் கவிஞர்

திருக்கழுக்குன்றத்துக்கு அணித்தாகவுள்ள உழலூரில் கி.பி.17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் வீரராகவ முதலி யார் என்ற பைந்தமிழ்ப் பாவலர். இவர் பிறவிக் குருட ராக இருந்தமையால் அந்தகக் கவி வீரராகவ முதலியார் என்று அழைக்கப்பட்டார். இவர் பிறவியில் குருடராயி னும் அறிவிற் குருடரல்லர். இப்பெரியார் கச்சியப்பர் என்ற பெரும் புலவரிடம் கற்றுப் பெருமை பெற்றார். இவர் திருக்கழுக்குன்றப் புராணம், திருக்கழுக்குன்ற மாலை, திருக்கழுக்குன்ற உலா, கயத்தாற்று அரசன் உலா, திருவாரூர் உலா,கீழ்வேளூர் உலா, சேயூர்க் கலம் பகம், சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், சந்திரவாணன் கோவை முதலிய நூல்களை இயற்றியவர்.

படிக்காசுப் புலவர்

தொண்டை நாட்டுக் களத்தூரில் பிறந்த இவர், இலக் கண விளக்கம் முதலிய நூல்களைச் செய்த வைத்திய நாத தேசிகரிடம் தமிழ்ப் புலமை பெற்றார். இவர் சிற்றர சராலும் செல்வராலும் ஆதரிக்கப் பெற்றவர். இப்பெரி யார் புதுக்கோட்டைச் சீமையை ஆண்டு வந்த சிவந் தெழுந்த பல்லவரையர்மீது உலாவும் பிள்ளைத் தமிழும் பாடினார் ; மாவண்டூரில் வாழ்ந்த வள்ளல் வள்ளல் ஒருவரது விருப்பப்படி தொண்டை மண்டல சதகத்தைப் பாடி முடித்தார். இப்புலவர் பெருமான் அக்காலத்தில் வாழ்ந்த சிற்றரசரிடமும் வள்ளல்களிடமும் சென்று தம் கவித் திறனைக் காட்டிப் பரிசில்கள் பெற்றுவந்தார். அவருள் இவரது உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தவர் கீழக்கரை யில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதி என்பவர். இவர் அவ்வள் ளலுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டார்; 29