அவர்மீது உள்ளத்தை உருக்கும் செய்யுட்கள் பல பாடி னார். இப்புலவர் பெருமான் சிவந்தெழுந்த பல்லவன் உலா, சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத் தமிழ், தொண்டைமண்டல சதகம், புள்ளிருக்கு வேளூர்க்கலம் பகம் முதலிய பல நூல்களைப் பாடியுள்ளார். இவையன்றி இவர் பாடியுள்ள தனிப் பாடல்களும் பலவாகும். தணிகைப் புராணம்
திருத்தணிகையில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் மீது பாடப்பெற்ற இந்நூல் உயர்ந்த தமிழ் நடையில் அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் கச்சியப்ப முனிவர். இவர் காலம் கி.பி. 18ஆம் நூற்றாண்டாகும். தணிகைப் பதியின் அமைப்பு, தொண்டைநாட்டு வரு ணனை, தல நிகழ்ச்சிகள், முருகப்பெருமான் பக்தர்களை ஆட்கொள்ளும் திறன் முதலியன இந்நூலில் இடம் பெற் றுள்ளன.
இவ்வாறே தொண்டைநாட்டில் உள்ள ஒவ்வொரு தலத்திற்கும் ஒரு புராணம் உண்டு. இப்புராணங்கள் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை பாடப்பெற்று வந்தன. இவற்றுள் கூறப்படும் தல வரலாறு, வருணனைப் பகுதி, ஆடை அணிகள் பற்றிய விவரங்களும், மக்கள் பழக்க வழக்கங்களும் உவமை முதலிய அணி விசேட மும் படிப்பவருக்கு இன்பம் ஊட்டவல்லவை. ஒவ்வொரு புராண ஆசிரியரும் தம் கால நிலையை உளங்கொண்டே நூல் இயற்றுதல் இயற்கை. ஆதலால் அவர் செய்துள்ள நூலில் அவர் காலப் பழக்க வழக்கங்களும் சமயக் கருத்துக்களும் உயர்ந்த உலகியல் கருத்துக்களும் பிற வும் இடம் பெறுதல் இயல்பு.
5. கலைச் சிறப்பு
கட்டடக்கலை
பல்லவ வேந்தர் பிற மன்னர்களைப் போலவே கட்டடக் கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை, நடனக்கலை
30