பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலியவற்றை வளர்த்து வந்தனர். காஞ்சி கயிலாச நாதர் கோவில், வைகுந்தப் பெருமாள் கோவில், மாமல்ல புரத்திலுள்ள ஆதிவராகர் கோவில் முதலியன பல்லவர் காலக் கட்டடக் கலைக்குச் சிறந்த சான்றுகளாகும். காஞ்சி கயிலாச நாதர் கோவிலின் முதல் திருச் சுற்றில் ஏறத்தாழ ஐம்பது சிறு கோவில்கள் திருச்சுற்றுச் சுவ ரோடு இணைந்துள்ள முறையில் அமைத்திருத்தல் மிகச் சிறந்த வேலைப்பாடாகும். இவ்வாறு அதே கோவிலில் கருவறையைச் சுற்றிலும் பெரும்புரைகள் அமைத்திருத்த லும்,படிப்படியாகக் குறைந்து மேல் நோக்கிச் செல்லும் விமான அமைப்பும் கட்டடக் கலையின் அறிவு நுட்பத்தை நன்கு விளக்குவனவாகும். வைகுந்தப் பெருமாள் கோவி லின் நான்கு உட்சுவர்களின் அரிய வேலைப்பாடும், அக் கோவில் கருவறையின் அமைப்பும், விமான அமைப்பும், சிங்கத் தூண்களின் அரிய வேலைப்பாடும் வியந்து பாராட் டத்தகுவன. கற்களை உடைத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிச் சுவர்கள் எழுப்புவதும், செங்கல் சுண்ணாம்பு இவற்றைக்கொண்டு விமானம் அமைப்பதும் பல்லவர் காலத்தில்தான் தொடக்கமாயின. அத்தொடக்க காலத்திலேயே அவர் தம் கட்டட வேலை சிறந்து காணப்பட்டது என்பதை நோக்கின், பல்லவர் காலத்துக் கட்டடக்கலை பெற்றிருந்த உயர் நிலையை நாம் ஒருவாறு உணரலாம்.

பல்லவர் காலத்துப் பாடல் பெற்ற கோவில்கள் எல்லாம் சோழர் காலத்தில் கற்கோவில்களாக மாறின. பல கோவில்கள் பெரிய அளவில் அமைப்புண்டன. இவை அனைத்தும் சோழர் காலக் கட்டடக் கலையை நமக்கு உணர்த்துவனவாகும். குதிரைகளைக் கொண்ட பெரிய தூண்கள், வீரர்களால் ஓட்டப்பெறும் குதிரைகளைக் கொண்ட பெரிய கற்றூண்களைக்கொண்ட மண்டபங்கள், திருச்சுற்றுக்கள், யாளிகளைக் கொண்ட தூண்களைக் கொண்ட மண்டபங்கள் என்பன விசயநகர வேந்தர்

31