காலத்தவை.வானளாவிய பெரும்பாலான கோபுரங்களும் இக்காலத்தன. இவை இக்காலக் கட்டடக்கலைச் சிறப்பை நமக்கு உணர்த்துவனவாகும்.
ஓவியக்கலை
பல்லவருக்கு முற்பட்டிருந்த சங்க காலத்திலேயே, தமிழர் ஓவியங்களை அமைத்து ஆடை நெய்தனர் ; கட்டடச் சுவர்கள் மீது மக்கள் ஓவியங்களையும் பிற உயிர்களைக் குறித்த ஓவியங்களையும் தீட்டி வந்தனர். நடன மண்ட பங்களிலும் கட்டில்களிலும் ஓவிய வேலைப்பாடு கொண்ட திரை இருந்து வந்தது. வண்ணங்களைக்கொண்டு எழு தாத மேலோட்ட ஓவியமும் (sketch) வரையப்பட்டது. அது 'புனையா ஓவியம்' எனப் பெயர் பெற்றது.
சித்தன்னவாசல் ஓவியங்கள்
பல்லவர் தாம் அமைத்த கற்கோவில்களில் எல்லாம் ஓவியங்களைத் தீட்டினர். இவ்வுண்மையை அக்கோவில் களில் இன்றளவும் காணப்படும் பல நிறக் குறிகளைக் கொண்டு தெளியலாம். சித்தன்னவாசல் புதுக்கோட்டைக்கு மேற்கே பத்து மைல் தொலைவில் உள்ளது. அங்கு ஒரு குன்றில் குடைவரைக் கோவில் ஒன்று உள்ளது. அதனைக் குடைவித்தவன் மகேந்திரவர்மன். அதன் முன் மண்டபம் சிறிய தாழ்வாரத்தில் சதுரவடிவில் அமைந் துள்ள உள் அறையைக் கொண்டது. முன் மண்டபத் தூண்கள் இரண்டில் அழகிய நடனமாதர் இருவர் ஓவி யங்கள் அமைந்துள்ளன. இம்மாதர்தம் கூந்தல் அமைப்பு, ஆடை அமைப்பு, அணி வகைகள், நடனமாடும் நிலையில் கைகளை வைத்துள்ள முறை முதலியன ஓவியர் திறமையை நன்கு புலப்படுத்துகின்றன. வலப்புறத் தூணின் உட் பகுதியில் அரசன் அரசியர் தலைகள் ஓவியமாகத் தீட்டப் பட்டுள்ளன. அரசனது தலையில் சிறந்த வேலைப்பாடு கொண்டதும் மணிகள் பதிக்கப் பெற்றதுமாகிய மகுடம்
33
3