பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்று காட்சியளிக்கிறது. அவனது கழுத்தில் மணிகள் பதித்த மாலைகள் காணப்படுகின்றன. காதுகளில் குண் டலங்கள் தொங்குகின்றன. அரசியின் தலைமீது ஒருவகை மகுடம் அணி செய்கிறது. அவள் காதுகளை வளையங்கள் அழகு செய்கின்றன. கூரையில் உள்ள ஓவியம் ஒரு தாமரைக் குளத்தைக் குறிக்கின்றது. பசிய தாமரை இலைகளும், தாமரை மலர்களும், மலராத பேரரும்புகளும் குளத்தை அழகு செய்கின்றன: சீவன் முக்தர்களாகிய சமணப் பெரியோர் அங்குக் காட்சி யளிக்கின்றனர். கண் ணையும் கருத்தையும் ஒருவழிப்படுத்தும் இவ்வோவியங் கள் இற்றைக்கு ஏறத்தாழ 1300 ஆண்டுகட்கு முன்பு வரையப் பெற்றன ஆயினும், உயிர் ஓவியங்கள் என்று சொல்லத்தக்கவாறு அமைந்துள்ளன.*

சிற்பக்கலை

சங்ககாலத்தில் செங்கல், சுதை, மண் இவற்றைக் கொண்டு உருவங்கள் அமைக்கப்பெற்றன. கல்லைப் பல வேலைகட்கும் பயன்படுத்தும் முறை கண்ட பல்லவர் காலத்தில், கல்லைக்கொண்டே பல உருவங்கள் அமைக் கப்பட்டன. மாமல்லபுரத்து ஆதிவராகர் கோவிலில் எதி ரெதிர்ச் சுவர்களில் மகேந்திரன் உருவச்சிலையும் அவன் தந்தையான சிம்மவிஷ்ணு உருவச்சிலையும் அமைந்திருக் கின்றன. சிம்மவிஷ்ணு முக்காலிமீது அமர்ந்திருக்கிறான். அவன் தலைமீது ஒருவகை மகுடம் இருக்கின்றது. அவன் அருகில் அவனுடைய தேவியர் இருவர் நிற்கின்றனர். அவர்களின் தலையணிகளும் பிற அணிகளும் அக்காலச் சிற்பிகளின் வேலைத் திறனை நன்கு வெளிப்படுத்துகின்றன. இம் மூன்று உருவங்களுக்கும் எதிர்ப்புறச் சுவரில்

இவ்வோவியங்களின் காலம் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் சிலர் இப்பொழுது கருதுகின்றனர்.

34